twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தம வில்லன் பர்ஸ்ட் லுக்... ப்ரெஞ்ச் புகைப்படக்காரர் படத்தை காப்பியடித்தாரா கமல்?

    By Shankar
    |

    சென்னை: கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் உத்தம வில்லன் படத்தின் பர்ஸ்ட் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது.

    வண்ணங்கள் தீட்டப்பட்ட, கேரள கதகள பாணி ஸ்டில், 2009-ல் ப்ரெஞ்ச் புகைப்படக் கலைஞர் எடுத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    உத்தம வில்லன்

    உத்தம வில்லன்

    வில்லுப்பாட்டுக் கலையை மையமாக வைத்து கமலின் இந்தப் படம் உருவாகிறது. அதைத்தான் உத்தம வில்லன் என தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்களாம். இந்த தலைப்பு மற்றும் படத்தில் கமல் போடும் ஒரு வேடம் ஆகியவற்றை பர்ஸ்ட் லுக் டீசரில் நேற்று வெளியிட்டிருந்தனர்.

    பாராட்டு

    பாராட்டு

    அந்த கெட்டப் தெய்யாம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞரின் முகத் தோற்றமாகும். அந்த கலையை இந்தப் படத்தில் கமல் கொண்டு வருகிறார் என்றதுமே பலரும் கமலைப் பாராட்டினர்.

    காப்பியா?

    காப்பியா?

    ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் கமலின் இந்த புது கெட்டப்புக்கான மூலம் எது என்பது இணையதளங்களில் வெளியாகிவிட்டது. கமல் கெட்டப் மாதிரியே உள்ள ஒரு படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகியுள்ளது.

    பிரெஞ்ச் புகைப்படக்காரர்

    பிரெஞ்ச் புகைப்படக்காரர்

    பிரான்சைச் சேர்ந்த பிரபல பயண புகைப்படக்காரரான எரிக் லஃபோர்க் இந்தப் படத்தை 2009-ல் தனது மலபார் சுற்றுப் பயணத்தின்போது எடுத்துள்ளார். அந்தப் படத்தைப் பார்த்துதான் கமல் தனது கெட்டப்பை வடிவமைத்துள்ளார் என தகவல் வெளியாகி பரபரப்பானது.

    கலைதானே?

    கலைதானே?

    ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என வாதிடுகின்றனர் கமல் ஆதரவாளர்கள். கதகளி கலைஞரின் முகம் மாதிரி கமல் கெட்டப் போட்டிருந்தால் அதை காப்பி என்று சொல்ல முடியுமா? தெய்யாம் அல்லது தெய்யாட்டம் என்பது வட மலபாரில் புகழ்பெற்ற ஒரு வழிபாட்டு முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருப்பது. அந்த வழிபாட்டு முறையை தன் படத்துக்கான் போஸ்டரில் பயன்படுத்தியது எப்படி தவறாகும்?

    சினிமா என்பதே கெட்டப்தானே

    சினிமா என்பதே கெட்டப்தானே

    அப்படிப் பார்த்தால், யாரும் வழக்கில் உள்ள பழங்கலைகள் கெட்டப்பைப் போடவே முடியாது. கமல் அரிதான ஒரு கலை வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார். அவ்வளவுதான்," என்கிறார்கள்.

    நியாயம்தானே!

    English summary
    Reports suggest that Kamal's Uthama Villain first look is a copy of French photographer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X