twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வானவில் வாழ்க்கை: இயக்குநராகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

    By Shankar
    |

    James Vasanthan turns as director
    சென்னை: தமிழில் சுப்பிரமணியபுரம் மூலம் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

    சுப்பிரமணியபுரம் படத்தில் கண்கள் இரண்டால் பாடல் நன்கு பிரபலமானதால் தொடர்ந்து இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது ஜேம்ஸ் வசந்தனுக்கு.

    இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஜேம்ஸ்.

    கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு உருவாகும் 'வானவில் வாழ்க்கை' என்ற படத்தை இயக்குகிறார். பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன், இந்தப் படம் குறித்து கூறியது:

    'ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதனை இன்னிசை சித்திரம் என்பார்கள். என்னைப் பொருத்தவரை படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடினால்தான் அது இன்னிசை சித்திரம்.

    அந்த வகையில் இப்படம் ஒரு இன்னிசை சித்திரம். மொத்தம் 19 பாடல்கள். ஜாஸ், ஹிப்ஹாப், கானா, கர்நாடக இசை, நாட்டுபுற இசை என பல தொகுப்புகளில் பாடல்கள் இடம்பெறுகின்றன. அதனை இப்படத்தில் நடிப்பவர்களே எழுதி, பாடி, ஆடப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் விசேஷம்," என்கிறார் ஜேம்ஸ்.

    English summary
    Music director James Vasanthan has turned as director and is going to direct a new movie soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X