twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்

    By Shankar
    |

    சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் விரைவில் ஜப்பானில் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளது. இத்தகவலை ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொன் நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.

    Kochadaiiyaan to be released soon in Japan

    இந்த படம் இந்தியாவில் இதுவரை அதிகமானோர் அறிந்திராத போட்டோ ரியாலிஸ்டிக் பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

    ஹாலிவுட்டில் மோஷன் கேப்சரிங் பணியில் நிபுணத்துவம் மிக்க ஒரு ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்கள் கோச்சடையான் படத்தைப் பார்த்துள்ளனர். இந்தியாவில் தயாரான படமா? என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டிப் பாராட்டியுள்ளனர்.

    உலகெங்கும் 3வது வாரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த படம், இப்போதும் தென்னிந்தியாவில் மட்டும் 350 திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.

    ஜூன் இறுதியில் லண்டன் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டில் கோச்சடையான் படத்தை திரையிடவிருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட திருவிழாக்களில் பங்கேற்பதற்கு கோச்சடையான் படத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

    விரைவில், ஜப்பான் நாட்டில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு அதிக அரங்குகளில் கோச்சடையானை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். கடந்த முறை ரஜினியின் எந்திரன் - தி ரோபோவை ஜப்பானில் 721 அரங்குகளில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajini's Kochadaiiyaan will be releasing in grand manner soon in Japan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X