twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்... அதிர வைக்கும் ஓபனிங்!

    By Shankar
    |

    கோச்சடையான்... உலக சினிமா சவாலுக்கு இந்திய சினிமாவின் பதில் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இன்று உலகமெங்கும் 6000 அரங்குகளில் அமர்க்களமாக வெளியாகிறது.

    இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானாலும், உலகின் பல பகுதிகளில் பிரிமியர் ஷோவாக நேற்றே வெளியாகிவிட்டது.

    பிரமாதம்

    பிரமாதம்

    படம் பார்த்த அத்தனை பேரும் 'பிரமாதம்... இந்தப் படத்துக்காக இந்திய சினிமா பெருமைப்படுகிறது... ரஜினி, தீபிகாவின் நடிப்பு அற்புதம், சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன..' என்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

    ரசிகர்கள் பாராட்டு ஒரு பக்கம் என்றால், படத்துக்கான வெளிநாட்டு மீடியா விமர்சனங்கள் மிக சாதகமாகவே வந்துள்ளன.

    500 ப்ளஸ் அரங்குகள்

    500 ப்ளஸ் அரங்குகள்

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கோவை, திருநெல்வேலி பகுதிகளில் மட்டும் குறைவான அரங்குகள்தான் நேற்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. இது அப்பகுதி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

    3டி வசதி இல்லை

    3டி வசதி இல்லை

    ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த சாதகமான விமர்சனங்களைப் பார்த்த பிறகு, பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட முன்வந்துள்ளனர். தியேட்டர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இந்தப் பகுதிகளில் 3டி வசதி கொண்ட அரங்குகள் இல்லாததும் ஒரு காரணம் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    தெலுங்கில்

    தெலுங்கில்

    தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் கோச்சடையான் வெளியாகிறது. அங்கு இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட 900 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துடன் நாகார்ஜூனா நடித்துள்ள மனம் என்ற படம் அங்கே வெளியாகியுள்ளது. இந்த இரு படத்துக்குமே போட்டி சற்று கடுமையாகத்தான் உள்ளது.

    கேரளாவில்...

    கேரளாவில்...

    கேரளாவில் மட்டும் 163 அரங்குகள் கோச்சடையானுக்கு தரப்பட்டுள்ளன. அங்கு சத்யம் சினிமாஸ் கோச்சடையானை வெளியிடுகிறது. முன்பதிவு மற்றும் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அங்கு அதிக அளவில் உள்ளது.

    இந்தியில்

    இந்தியில்

    இந்தியில் 1200 திரையரங்குகளுக்கும் அதிகமாக கோச்சடையான் வெளியாகிறது. மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், கொல்கத்தா, குர்கான் போன்ற நகரங்களில் தமிழ் கோச்சடையானும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது. இன்று அங்கு வெளியாகும் ஒரே இந்திப் படம் ஹீரோபட்னி.

    கலக்குது சென்னை

    கலக்குது சென்னை

    கோச்சடையான் வெளியீடு சென்னையில் களைகட்டியுள்ளது. ரஜினி படங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன சென்னையிலும் புற நகரிலும். மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மொத்தமாக கோச்சடையானுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக மாயாஜால் தனது 16 அரங்குகளையும் கோச்சடையானுக்கு ஒதுக்கி, நாளொன்றுக்கு 100 காட்சிகள் நடத்துகிறது.

    350 காட்சிகள்

    350 காட்சிகள்

    சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் ஒரு நாளைக்கு 350 காட்சிகள் நடத்துகின்றன திரையரங்குகள். இது வேறு எந்த ஹீரோவும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கை ஆகும். அதேநேரம், எப்போதுமே ரஜினி படங்களை வாங்கித் திரையிடும் சில அரங்குகள் இந்த முறை அமைதியாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.

    உலகளவில்..

    உலகளவில்..

    சர்வதேச அளவில் மட்டும் கோச்சடையான் 2500 அரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகிறது. அமெரிக்காவில் 250 ப்ளஸ் அரங்குகள், ஐரோப்பாவில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான்.

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்கா

    ரஜினி படங்களுக்கான முக்கியச் சந்தையாகத் திகழும் தென்னாப்பிரிக்காவில், அதிக அரங்குகள் இந்த முறை கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சீனா

    சீனா

    சீனா மற்றும் ஹாங்காங்கிலும் கோச்சடையான் சில அரங்குகளில் வெளியாகிறது. மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கோச்சடையான் நேற்றே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    வளைகுடா

    வளைகுடா

    வளைகுடா நாடுகளில் 230க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகியுள்ளது.

    மெகா ஓபனிங்

    மெகா ஓபனிங்

    இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இல்லாத பெரிய ஓபனிங் கோச்சடையானுக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிக்காக வசூலான தொகையே பல கோடி என்று செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு 25 முதல் 40 டாலர்கள் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

    100 கோடியைத் தாண்டுமா?

    100 கோடியைத் தாண்டுமா?

    இப்போதைய நிலவரப்படி, கோச்சடையானுக்கு முதல் மூன்று நாட்களின் முடிவில் ரூ 100 கோடி வரை வசூலாகும் என கணக்கிட்டுள்ளனர் பாக்ஸ் ஆபீசில். அப்படி நடந்தால், அது இந்திய சினிமாவின் மிகப் பெரிய சாதனைதான்!

    English summary
    Today, Superstar Rajini's Magnum Opus Kochadaiiyaan releasing with earth shaking opening all over the world!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X