twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் பெயரில் கொள்ளையடிக்கும் திரையரங்குகள்... முதல்வர் கவனிப்பாரா?

    By Shankar
    |

    சென்னை: கோச்சடையான் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்தும், அந்த வரிவிலக்கின் பலனை மக்களுக்குத் தராமல், திரையரங்குகளே கொள்ளையடித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவு, அரசு உத்தரவுகளையும் மதிக்காமல் இந்த செயலில் திரையரங்குகள் ஈடுபட்டு வருகின்றன.

    ரஜினி படம் வந்தாலே திரையரங்குகள் திருவிழாக் கோலத்துக்கு மாறுவது வழக்கம்.

    கோச்சடையான் ரிலீசான போது, இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இல்லாத அளவு திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். டிக்கெட்டுகள் தாறுமாறான விலைக்கு விற்கப்பட்டன. சில அரங்குகளில், உரிமையாளர்களே ரூ 500 வரை டிக்கெட் விலையை ஏற்றி விற்றனர்.

    வழக்கு

    வழக்கு

    இதை மனதில் கொண்டு, படம் வெளிவருவதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோச்சடையானுக்கு அரசு வரி விலக்கு அளித்துள்ளது செல்லாது என்று கோரியிருந்தனர்.

    ஆனால் வரிவிலக்கு செல்லும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

    இந்த வரிவிலக்கின் பலன் மக்களுக்குச் சேர வேண்டும். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அதை தாங்களே எடுத்துக் கொள்ளும் போக்கு தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டு கோச்சடையான் டிக்கெட்டுகளை கேளிக்கை வரியான 30 சதவீதத்தைக் கழித்துதான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.

    நீதிமன்ற உத்தரவு

    நீதிமன்ற உத்தரவு

    அந்த உத்தரவில், 'திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது.

    கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில், திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். வழக்கை, ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்", என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

    அரசு உத்தரவு

    அரசு உத்தரவு

    இதைத் தொடர்ந்து தமிழக அரசும், திரையரங்குகள் கோச்சடையான் படத்துக்கான டிக்கெட்டுகளை கேளிக்கை வரியைக் கழித்துக் கொண்டு வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    காற்றில் பறக்கவிட்டனர்

    காற்றில் பறக்கவிட்டனர்

    ஆனால் இந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டனர் திரையரங்க உரிமையாளர்கள். தமிழகத்தின் அத்தனை மல்டிப்ளெக்ஸ்களிலும் முழுக் கட்டணத்தையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்கின்றனர். இன்றுவரை எந்த அரங்கிலும் கேளிக்கை வரி கழித்துக் கொண்டு டிக்கெட் கட்டணம் பெறவில்லை.

    கொள்ளை

    கொள்ளை

    திரையரங்க உரிமையாளர்களே இந்த கேளிக்கை வரியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர். இதனால் கோச்சடையான் தயாரிப்பாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ எந்த லாபமும் இல்லை. அவர்களிடம் கேளிக்கை வரியை கழித்துக் கொண்டுதான் வசூல் விபரங்களைக் காட்டுகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். படம் எடுத்தவர்களைவிட பல மடங்கு பணம் பார்ப்பது இந்த தியேட்டர்காரர்களே.

    மல்டிப்ளெக்ஸ்களில்..

    மல்டிப்ளெக்ஸ்களில்..

    கோச்சடையான் படத்துக்கு இன்றும் கூட எந்த வகுப்பில் போய் உட்கார்ந்தாலும் ரூ 100 என டிக்கெட் வசூலிக்கிறார்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும். சென்னையிலோ மல்டிப்ளெக்ஸ்கள் ரூ 120 வசூலிக்கிறார்கள். ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்கில் மட்டும்தான் ரூ 50, 40 கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

    முதல்வர் கவனத்துக்குப் போகுமா?

    முதல்வர் கவனத்துக்குப் போகுமா?

    திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது, வரி விலக்குத் தொகை மக்களுக்குச் சேர வேண்டும் என்று முதல்வர் கடுமையான உத்தரவு பிறப்பித்தும்கூட, தமிழகத்தின் எந்தத் தியேட்டரும் இந்த நிமிடம் வரை அதைப் பின்பற்றவே இல்லை. தங்கள் கொள்ளையைத் தொடர்ந்து கொண்டுள்ளன என்ற உண்மை முதல்வர் கவனத்துக்குப் போகுமா?

    எதற்கெடுத்தாலும் வழக்கு மட்டும் தொடரும் தன்னார்வலர்கள், இந்த விஷயத்துக்காக நீதிமன்றம் போவார்களா? பார்க்கலாம்!

    English summary
    All the theaters which releasing Kochadaiiyaan are collecting full ticket price from the viewers against the High Court's order. The court has earlier ordered all theaters not to collect the entertainment tax from the public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X