twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலச்சந்திரனை 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் சதி.. பகீர் சர்ச்சையில் 'புலிப் பார்வை'!!

    By Mathi
    |

    சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை 'புலிப்பார்வை' திரைப்படத்தில் ஒரு 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் சதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் போர்க்களத்துடன் முடிவடைந்தன. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் வேட்டையாடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

    உலகை உலுக்கிய புகைப்படம்

    உலகை உலுக்கிய புகைப்படம்

    பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் முள்வேலி முகாம்களில் சிறையிலடைக்கப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில் உலகை உலுக்கும் ஒரு படம் வெளியானது.

    முக்கிய போர்க்குற்ற ஆதாரம்

    முக்கிய போர்க்குற்ற ஆதாரம்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரோடு ராணுவ முகாமில் இருப்பதும் பின்னர் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பதுமான அக்காட்சி, இலங்கையின் முக்கிய போர்க்குற்ற ஆதாரமாக இருந்து வருகிறது.

    சீருடையில் பாலச்சந்திரன்

    சீருடையில் பாலச்சந்திரன்

    இந்த நிலையில் வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள "புலிப் பார்வை" படத்தின் முன்னோட்ட காட்சிகள் அனைத்திலுமே பாலச்சந்திரன், புலிகள் இயக்க சீருடையில் இருப்பது, ஆயுதமேந்தி இருப்பது, ராணுவ பயிற்சி மேற்கொள்வது என்று போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

    சுற்றி வளைத்த போதும் சீருடை

    சுற்றி வளைத்த போதும் சீருடை

    பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்திடம் சிக்கிய போது மேலாடை கூட இல்லாமல்தான் இருப்பதாக உண்மை புகைப்படம் சொல்ல.. புலிப்பார்வை படத்திலோ, புலிகள் இயக்க சீருடையிலேயே இருந்து சுற்றி வளைக்கப்படுவது போல காட்டப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை அரசுக்கு ஆதரவு?

    இலங்கை அரசுக்கு ஆதரவு?

    இலங்கை அரசும் சுப்பிரமணியன் சுவாமிகளும் சொல்வதை நிரூபிப்பது போல, பாலச்சந்திரனை புலிகள் இயக்க போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை. அத்துடன் சிறுவர்களை புலிகள் தங்களது ராணுவத்தில் இணைத்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதாகவும் சித்தரிக்கிறது புலிப் பார்வை.

    கொந்தளிக்க வைக்கிறது..

    கொந்தளிக்க வைக்கிறது..

    இலங்கை அரசிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் அனுமதி பெற்று படம் எடுத்தோம் என்று புலிப்பார்வை படக் குழு கூறிக் கொள்வது வினோதமாக இருந்தாலும் சித்தரிப்புகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது தமிழின உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

    இனம் வழியில் இன்னொரு ஈனம்?

    இனம் வழியில் இன்னொரு ஈனம்?

    ஏற்கெனவே சந்தோஷ் சிவன் தன் பங்குக்கு இனம் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தார். அப்பட்டமான அந்த சிங்கள ஆதரவுப் படத்தை, என்ன ஏது என விளங்கிக் கொள்ளாமலேயே தூக்கிப்பிடித்தவர்கள்தான் தமிழ் சினிமாக்காரர்கள். இப்போது புலிப்பார்வையும் அந்த ஈனப் பட்டியலில் சேரும் போலத் தெரிகிறது!

    English summary
    After Inam, Kollywood is stepping into controversial terrain again with the new film 'Puliparvai" which represents LTTE leader Prabhakaran's son balachandran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X