twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரம்பரிய இசைக்கு புது வடிவம் தரும் காஸ்மிக்!

    By Shankar
    |

    இந்தியாவில் கடவுளை அடையும் வழியாக இசை மதிக்கப்படுகிறது.

    எல்லா இசை மேதைகளும் ஒவ்வொரு ராகத்தையும் சுரத்தையும் இசைப் படைப்பையும் தெய்வீகமாகவே பார்க்கிறார்கள். வழிபடுகிறார்கள். இந்த பாரம்பரிய வணக்கமும் வழிபாடும் குருவிடமிருந்து சீடனுக்கும் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கும் தொடர்ந்து வழிவழியாக வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தே இருக்கிறது.

    இந்த மரபுவழி நம்பிக்கையை போற்றும் வகையில் இந்திய பாரம்பரிய இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை காஸ்மிக் நிறுவனம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிறுவனம் பிரமாதமான, இசைப் படைப்புகள் மூலம் கர்நாடக இசையை மக்களிடம் பரப்பி வருகிறது.

    காஸ்மிக் இசை நிறுவனம்

    காஸ்மிக் இசை நிறுவனம்

    தன் பல்வேறு தலைப்புகளிலான தயாரிப்புகள் மூலம் பக்தி, ஆன்மீகம், தியானம் சார்ந்த இசையை மக்களிடம் சேர்த்து வருகிறது.

    "காஸ்மிக் மியூசிக் இந்திய பாரம்பரிய இசையின் பெருமையை முழுமையாக உணர்ந்துள்ளது. அதை வருக்கால தலைமுறைக்கு எடுத்து செல்லும் முயற்சிதான் குறுந்தகடு வெளியீடுகள், டிஜிட்டல் இசை வடிவங்கள், மேடைகக் ச்சேரிகள் சார்ந்த இசைப் பணிகள் போன்றவை. தொலை நோக்கு சிந்தனையுடனும் நீண்ட கால அடிப்படையிலும் தென்னிந்தியாவின் பிற இசை நிறுவனங்களுடனும் காஸ்மிக் கை கோர்த்துள்ளது" என்கிறார் காஸ்மிக் வணிகத் தலைவரான ராகுல் குகா.

    பிரபல கலைஞர்கள்

    பிரபல கலைஞர்கள்

    புகழ்பெற்ற பிரபல இசைக் கலைஞர்கள் பலரும் காஸ்மிக்குடன் கைகோர்த்துள்ளனர்.

    அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, பண்டிட் ரோனு மஜும்தார், ஒ.எஸ்.அருண், சஞ்சய் சுப்ரமணியன், விஜய்சிவா, பி.உன்னி கிருஷ்ணன், நித்யஸ்ரீமகாதேவன், யூ.ஸ்ரீநிவாஸ், கத்ரி கோபல்நாத், ராஜேஷ் வைத்யா, சுதா ரகுநாதன் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

    சுதா ரகுநாதன்

    சுதா ரகுநாதன்

    சுதா ரகுநாதனின் கர்நாடக இசை, பக்தி இசை, உயிரோட்டமான ஆல்பங்கள் போன்றவை காஸ்மிக்கின் தனிப்பட்ட பெருமைக்குரிய அம்சங்கள் எனலாம். இவை விசாலமான ரசிக சாம்ராஜ்யத்தை தேடிக் கொடுத்துள்ளன. இந்த 2013ல் "மியூசிக் அகாடமி" அவருக்கு "சங்கீத கலாநிதி" விருது வழங்குகிறது. இதை முன்னிட்டு சுதா ரகுநாதன் கர்நாடக சங்கீத உலகத்துக்கு ஆற்றியுள்ள பெருமைமிகு பணிகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் அவரது இசை தொகுப்பை காஸ்மிக் வெளியிட்டுக் கௌரவம் செய்கிறது.

    விண்ட் சாங்

    விண்ட் சாங்

    "தி ஹெரிடேஜ் கலெக்ஷன்" (The Heritage collection) மற்றும் "தி மாஸ்டர் பீஸ் கலெக்ஷன்" (The Master piece Collection) போன்ற தொகுப்புகளில் உள்ள இசை ஒரு வரப் பிரசாதமாகும் 1980 - 1990 களில் மேடைகளை அலங்கரித்த இசை கலைஞர்கள் மதுரை மணி ஐயர், டி.ஆர்.மகாலிங்கம், சிக்கில் சகோதரிகள், செம்மம்குடி சீனிவாச ஐயர், டாக்டர் எஸ்.ராமநாதன், எம்,எல்.வசந்தகுமாரி, சுதா ரகுநாதன், விஜய் சிவா போன்றவர்களின் கச்சேரிகள் காஸ்மிக்கில் மறு அவதாரம் எடுத்து வந்துள்ளன. இதன் மூலம் அன்றைய இசைக் கச்சேரிகளை இன்றும் உய்த்து உணர முடியும். 1980-1990 களில் சுவாசித்த அதே பிராண வாயு இசையை இன்றும் சுவாசித்து இன்புற முடியும்.

    இசை இணையதளம்

    இசை இணையதளம்

    சிறந்த கர்நாடக இசை ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்க்கும் வகையிலும் எளிதாக எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலும் காஸ்மிக் தன் வலை தளத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. முகவரி www.kosmikmusic.com வருகிற 2014 புத்தாண்டில் கர்நாடக இசை உங்கள் கையருகே அலையடிக்கப் போகிறது. வித்தக இசை எல்லாம் உங்கள் விரல்நுனியில் வழியப் போகிறது.

    உங்கள் கணினியின் விசைப்பலகை இனி இசைப் பலகையாக மாறி இனிக்கப் போகிறது.

    Read more about: இசை music
    English summary
    Kosmic music is releasing many new contemporary music CDs now to celebrate music season.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X