twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிமுகவுக்கு எதிராக ரவுண்டு கட்டும் கமல் ரசிகர்கள்: பரபரப்பு பின்னணி

    |

    சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் கமல் நடித்த விஸ்ரூபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல காட்சிகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும், இந்த காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தது. ராமநாதபுரத்தில் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு நடத்தினர்.

    கமல் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் காட்சி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    தடை

    தடை

    இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது. இதனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

    வெளியேறுவேன்

    வெளியேறுவேன்

    ஒரு கலைஞனுக்கு இதை விட அவமானம் வேறு எதுவும் இல்லை. எனவே, நான் இந்தியாவை விட்டே வெளியேறுகின்றேன் என கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கமல்.

    டி.டி.எச்.

    டி.டி.எச்.

    மேலும், படத்தை திரையரங்குகள் மூலம் வெளியிடுவதை காட்டிலும் டி.டி.எச் மூலம் வெளியிட கமல் முடிவு செய்தார். இதற்கும் கடும் கண்டனம் எழுந்தது. விஸ்வரூ பம்படத்தை டி.டி.எச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று கூறி இந்த விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு திரைப்பட வினியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள் கொண்டு சென்றனர்.

    அரசியல் பேச்சு

    அரசியல் பேச்சு

    கமலுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு அவர் விழா ஒன்றில் தமிழக அரசியல் சார்புடைய விவகாரம் பற்றி பேசியதே காரணம் என பரவலாக பேசப்பட்டது. இவை எல்லாம் ஒரு கட்டத்தில் சுமூகமாக முடிவு செய்யப்பட்டது.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    இந்த நிலையில் தனது தலைவர் கமலுக்கு பெரும் தொந்தரவு கொடுத்த தமிழக அரசுக்கும், அதிமுக தலைமைக்கும் பாடம் புகட்ட வேண்டும் என தமிழகம் முழுக்க உள்ள கமல் ரசிகர்கள் ரகசிய முடிவு எடுத்தனர். இதன் காரணாக, அவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

    கமல்

    கமல்

    இந்த தகவலை ஒவ்வொரு ரசிகர்களும், செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பி பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த அந்த பகுதி திமுக வேட்பாளர்கள் கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கமல் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    திமுக

    திமுக

    இந்த தகவல் திமுக தலைமைக்கு கொஞ்சம் லேட்டாக எட்டியுள்ளது போல. இதனையடுத்து கமல் ஹாசனை சந்திக்க திமுக தரப்பில் இருந்து முஸ்தீபுகள் தயாராகி வருகின்றது. விரைவில் திமுக முக்கிய தலைவர் ஒருவர் கமலை சந்திக்கும் நிகழ்ச்சி வெளியாகலாம். அல்லது மறைமுக ஆதரவு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

    English summary
    Buzz is that Kamal Haasan's fans have decided not to vote for ADMK in the lok sabha election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X