twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர் முதல் குஷ்பு வரை.. திமுகவில் இருந்து வெளியேறிய திரை நட்சத்திரங்கள்...

    By Mayura Akilan
    |

    சென்னை: எம்.ஜிஆர் முதல் குஷ்பு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வெளியேறியவர்கள்தான்.

    திமுகவில் இணைந்த நடிகைகளை விட நடிகர்கள்தான் அதிக அளவில் வெளியேறியுள்ளனர்.

    வெளியேறிய எம்.ஜி.ஆர்

    வெளியேறிய எம்.ஜி.ஆர்

    அண்ணாவின் மீது கொண்ட ஈர்ப்பினால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக முழு ஆதரவு கொடுத்தார். பின்னர் 1972ம் ஆண்டில் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவை தொடங்கினார்.

    குஷ்புவின் விலகல்

    குஷ்புவின் விலகல்

    திமுக மீதான ஈர்ப்பில் நடிகர், நடிகைகள் அக்கட்சியில் சேர்வதும் பின்னர் மனம் வெறுத்து விலகுவதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் குஷ்பு.

    ‘பொதுவாக திமுகவில் சினிமா நட்சத்திரங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே திரையுலகினர் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களது உழைப்புக்கேற்ற நிர்வாகப் பதவிகள் கொடுப்பதில்லை' என்று பரவலாகவே கூறப்படுகிறது.

    நட்சத்திரங்களை மதிப்பதில்லை

    நட்சத்திரங்களை மதிப்பதில்லை

    கடந்த காலங்களில் திமுகவில் சேர்ந்து பணியாற்றிய சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, தியாகு, மறைந்த நடிகர்கள் எஸ்.எஸ்.சந்திரன், உள்ளிட்டோரும் இதே வரிசையில் திமுக உறுப்பினர்களாக இருந்து பின்னர் வெளியேறியவர்கள்தான்.

    பராசக்தி நாயகன் சிவாஜி

    பராசக்தி நாயகன் சிவாஜி

    நடிகர் திலகம் சிவாஜியை உலகிற்கு அறிமுகப்படுத்தியது பராசக்தி திரைப்படம்தான். திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955ல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ "திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?"என்று கேட்டனர். இதனையடுத்து திமுகவிலிருந்து வெளியேறினார்.

    காங்கிரஸ் கட்சியில் சிவாஜி

    காங்கிரஸ் கட்சியில் சிவாஜி

    திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ' என்று கேவலப்படுத்தியது. ஆனால், சிவாஜி 62ல் காங்கிரசில் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அதுவும் சிவாஜிக்கு கை கொடுக்கவில்லை.

    தனிக்கட்சி நாயகர்கள்

    தனிக்கட்சி நாயகர்கள்

    திமுகவில் இருந்து வெளியேறிய டி.ராஜேந்தர், சரத்குமார் ஆகியோர் தனியாக கட்சி தொடங்கினர். ஆனால் தனிக்கட்சி தொடங்கியவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர்.

    வடிவேலுவின் வருத்தம்

    வடிவேலுவின் வருத்தம்

    2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரது திரையுலகப் பயணத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இதனால் திமுக ஆதரவு என்ற நிலையில் இருந்து விலகினார்.

    அதிமுகவிற்கு போன தியாகு

    அதிமுகவிற்கு போன தியாகு

    20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆதரவு நிலையில் இருந்த தியாகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

    நெப்போலியன், பாக்கியராஜ்

    நெப்போலியன், பாக்கியராஜ்

    திமுகவில் இணைந்து மத்திய அமைச்சராக இருந்த நடிகர் நெப்போலியனும். அதிமுகவில் இருந்து திமுகவிற்குப் போன கே.பாக்யராஜும் சமீபகாலமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

    ஜே.கே.ரித்தீஷ்

    ஜே.கே.ரித்தீஷ்

    கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஜே.கே.ரித்தீஷ், திமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளார்.

    ராதிகாவின் நிலை

    ராதிகாவின் நிலை

    நடிகை ராதிகா 90களில் தீவிர திமுக ஆதரவாளராக இருந்தார். கட்சியில் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில ஆண்டுகளிலேயே திமுக ஆதரவு என்ற நிலையில் இருந்து மாறினார்.

    திமுகவில் பரபரப்பு

    திமுகவில் பரபரப்பு

    ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை குஷ்பு. திமுகவில் 2010-ம் ஆண்டு சேர்ந்த குஷ்பு, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்தார். குறுகிய காலத்திலேயே ஸ்டார் பேச்சாளராக உயர்ந்த அவர், ‘தாங்க முடியாத மனஅழுத்தம் காரணமாக' விலகியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Why film stars quit in DMK?here is the background story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X