twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணன் செல்வமணி... அண்ணி ரோஜா... அஞ்சலியை மடக்க புது ட்ராக்கில் மு களஞ்சியம்!

    By Shankar
    |

    கையில் காசில்லை.. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் களஞ்சியம்... நடிகை அஞ்சலிதான் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு 'மொட்டைக் கடிதாசி' வெளியிட்டதும், பின்னர் உடலில் எந்தக் காயமும் இல்லாமல் படுக்கையில் படுத்துக் கிடந்த களஞ்சியம் படம் வெளியாகி, அவரது உடம்புக்கு ஒன்றுமில்லை என்ற உண்மை அம்பலமானதும் நினைவிருக்கலாம்.

    நடிகை அஞ்சலியை மிரட்டல் மூலம் வளைக்க முடியவில்லை என்பதால், களஞ்சியம் போட்ட சென்டிமென்ட் ட்ராமா என திரையுலகினரே கூறும் அளவுக்குப் போய்விட்டது களஞ்சியத்தின் இந்த செயல்.

    இந்த நிலையில், மீண்டும் ஒரு சென்டிமென்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார் மு களஞ்சியம். தங்களின் அண்ணி ரோஜா எம்எல்ஏவும், அண்ணன் ஆர் கே செல்வமணியும்தான் தன்னைக் காப்பாற்றியதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதன் மூலம் ஆந்திராவில் ரோஜாவை வைத்தும், தமிழில் இயக்குநர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அவரது கணவர் ஆர்கே செல்வமணியையும் காட்டி ரோஜாவை மடக்க களஞ்சியம் திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

    இன்று களஞ்சியம் வெளியிட்ட அறிக்கை இது:

    கடந்த 20-ந் தேதி ராஜமுந்திரியில் நடந்த எனது நண்பரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன். வழியில் கார் டயர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. கார் இடதுபுறமாக பல தடவை புரண்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் கிடத்தப்பட்டு இருந்தேன். வலி தாங்க முடியவில்லை. கண்களைத் திறக்க முடியவில்லை.

    Mu Kalanjiyam's new route to surrender Anjali

    தெலுங்கு மொழியும் எனக்கு தெரியாது. மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. போலீஸ் அதிகாரிகளுக்கும், செவிலியருக்கும் தெலுங்கு மொழியில் வாக்குவாதம் நடக்கிறது. டாக்டர்கள் தாமதமாக வந்தால் இவர்களைக் காப்பாற்ற முடியாது. எனவே உடனே வரச்சொல்லுங்கள் என்று போலீஸ் அதிகாரி சொல்கிறார்.

    எனக்கு அரைகுறையாய் புரிந்தது. நான் செத்து கொண்டிருக்கிறேன். முகத்தில் ரத்தம் வழிந்து உறைந்து இருந்தது. என்னுடன் பயணம் செய்தவர்களுக்கு என்ன ஆனது என்றும் புரியவில்லை.

    அப்போது ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் நான் ரோஜா எம்.எல்.ஏ.விடம் இருந்து வருகிறேன். மேடம் லைனில் இருக்காங்க பேசுங்க என்கிறார். ரோஜா பேசியபிறகு நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிறந்த மருத்துவ நிபுணர்களால் காப்பாற்றப்பட்டோம். மருத்துவ செலவுக்கு எந்த பணமும் கேட்கவில்லை.

    தமிழகத்தின் மருமகள் ரோஜா எம்.எல்.ஏ.வால் காப்பாற்றப்பட்டோம். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் வந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நொறுங்கினேன்.

    அப்போது தான் நான் எனது உதவியாளர் பெருஞசித்தன் மூலமாக திரைப்படத்திலே என் நம்பிக்கைக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட்ட, எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் செயல் வீரன் தோழர் அருண் குமார் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்கிற செய்தியை அறிந்து நொறுங்கிப்போனேன். என்னால் அதை சீரணிக்க முடியவில்லை.

    கதறி அழுகிறேன். எனது ரத்த அழுத்தம் உயர்கிறது. மருத்துவர்கள் ஓடிவருகிறார்கள். செய்தி சொன்ன பெருஞசித்தனைத் திட்டுகிறார்கள்.

    தோழர் அருண்குமார் எனது ஊர்க்காரர். அமைதியான தமிழ்தேசிய உணர்வாளர். அவரைக் காப்பாற்றி விட்டு நான் செத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. அருணை நினைத்து நினைத்து கலங்கிக்கொண்டே மருத்துவமனையில் ஒரு நடைபிணமாக நான் கிடக்கிறேன்.

    எனினும் பிரதிபலன் பாராமல் எங்களை நொடிப்பொழுதில் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அண்ணி ரோஜா எம் எல் ஏ அவர்களுக்கும், எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் சங்கத் செயலாளர் அண்ணன் ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அதோடு என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அத்தனை தமிழக அரசியல் தலைவர்களுக்கும்,அனைத்துக்கட்சி தொண்டர்களுக்கும்.தமிழ்தேசிய இயக்கத் தோழர்களுக்கும்,திரைப்படத்துறை உறவுகளுக்கும், பத்திரிக்கைத்துறை மற்றும் இணையம் சார்ந்த அனைத்து ஊடகத்துறையினருக்கும், என் மீது மாறாத அன்புகொண்ட நண்பர்களுக்கும், ஈழத் தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழர் நலம் பேரியக்கத்தின் உயிர்த் தோழர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    -இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Director Mu Kalanjiyam thanked Roja MLA and RK Selvamani for saving him from an accident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X