twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கில் நடிக்க நயன்தாரா - பிரகாஷ் ராஜூக்கு ஒரு ஆண்டு தடை

    By Shankar
    |

    ஹைதராபாத்: அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு தராததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குநர்கள் சங்கம்.

    அதேபோல ஆகடு படத்தின் உதவி இயக்குநரைத் திட்டியதற்காக நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நயன்தாரா, பிரகாஷ் ராஜ் இருவருமே தெலுங்கில் முக்கியமான நடிகர்கள்.

    அனாமிகா

    அனாமிகா

    சேகர் கம்மூலா இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் அனாமிகா. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு, செய்தியாளர் சந்திப்பு என எந்த நிகழ்வுக்கும் நயன்தாரா வரவில்லை. எனவே மிகவும் கொதிப்படைந்திருந்தார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும்.

    புகார்

    புகார்

    இது பற்றி தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு, இயக்குநர் சங்கம் சார்பில் நேற்று நயன்தாராவுக்கு எதிராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டுக்கு நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    இதேபோல் ஆகடு பட ஷூட்டிங்கின்போது உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் தரப்பட்டிருந்தது. அந்தப் படத்திலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார்.

    ஒரு ஆண்டு

    ஒரு ஆண்டு

    பின்னர் அந்தப் புகார் குறித்து இயக்குநர் சங்கம் விசாரணை மேற்கொண்டது. அவர் திட்டியதும், தரக்குறைவாக நடந்து கொண்டதும் நிரூபணம் ஆனதாகக் கூறி, தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

    English summary
    Actors Nayanthara and Prakash Raj have banned to act in Telugu for a year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X