twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இருந்தால் காட்சி வெட்டி எறியப்படும்: சென்சார் அதிகாரி

    By Veera Kumar
    |

    டெல்லி: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்கள் வந்தால் அந்த காட்சிகள் வெட்டப்படும் என்று இந்திய தணிக்கை குழுவின் தலைமை செயல் அதிகாரி ராகேஷ்குமார் தெரிவித்தார். தற்போதுள்ள நடைமுறையில் அதுபோன்ற காட்சிகள் மங்கலாக்கப்பட்டும், வசனங்கள் மவுனிக்கப்பட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், இனிமேல் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என்றும் அவர் கூறினார்.

    மங்கல், மவுனம்

    மங்கல், மவுனம்

    திரைப் படங்களில் ஆபாச வசனமோ, அல்லது மோசமான காட்சியோ இருந்தால், அந்த வசனத்தை வாயசைக்க மட்டும் விட்டுவிட்டு சத்தத்தை கட் செய்துவிடுவார்கள் தணிக்கை குழுவினர். பீப்.. என்ற சத்தம் மட்டும் அப்போது வெளியேவரும். அதேபோல அதேபால பெண்ணின் உடல் பகுதி ஆபாசமாக தெரிந்தால் 'பிளர்' எனப்படும் மங்கலாக்கி மறைப்பார்கள்.

    'திறந்த மனதுடன்' அனுஷ்கா

    'திறந்த மனதுடன்' அனுஷ்கா

    சிங்கம் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா தனது மார்பு கிளிவேஜ் முழுவதும் தெரிய, ஒய்யாரமாக நடந்துவருவது போல காட்சியமைக்கப்பட்ட பாடலை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த பாடலில் அனுஷ்கா மார்பகத்தில் ஆபாசமாக தெரியும் பகுதிகள் மங்கலாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் நடிகைகளின் தொப்புளும் இதுபோல மறைக்கப்படும்.

    வன்முறைக்கும் இதே கதி

    வன்முறைக்கும் இதே கதி

    இதேபோல விபத்து, வன்முறை காட்சிகளில் ரத்தம் சிந்தியபடி மனிதர்கள் விழுந்து கிடக்கும் காட்சியையும் சென்சார் குழு மறைத்து காண்பித்து வருகிறது.

    இனிமேல் வெட்டு வெட்டுதான்

    இனிமேல் வெட்டு வெட்டுதான்

    இனிமேல் அதுபோல மங்க செய்வதோ, மவுனிக்க செய்வதோ இல்லாமல், காட்சியையே நீக்கிவிட 'ஸ்ட்ரிக்டாக' முடிவு செய்துள்ளது. இதை மத்திய தணிக்கை குழு தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    பெண்கள், குழந்தைகளுக்கு மரியாதை

    பெண்கள், குழந்தைகளுக்கு மரியாதை

    இதுபற்றி ராகேஷ் குமார் கூறியுள்ளதாவது: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.

    புரிந்து விடுகிறதே..

    புரிந்து விடுகிறதே..

    வசனங்களை சத்தமில்லாமல் செய்தாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புரிய வேண்டியது, புரிந்து விடுகிறது. அதனால் இனி, பழைய சென்சார் நடைமுறை இன்றி, காட்சிகளையே நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    CEO of the Censor Board of Film Certification (CBFC), Rakesh Kumar expressed his displeasure over objectionable content being passed in films. "We want to nip this trend in the bud," he had asserted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X