twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் 36 வயதில் மர்ம மரணம்!

    By Shankar
    |

    ஸ்டாக்ஹோம்: சுவீடனைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் தனது 36 வயதில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.

    அவரது மரணத்துக்கான காரணம் இதுதான் என தெளிவாகத் தெரியவில்லை.

    Oscar-winning 'Searching for Sugar Man' director dies at 36

    சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற தனது இசை வீடியோ ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றவர் பென்ட்ஜொலல்.

    1977-ல் பிறந்த பென்ட்ஜொலல், தொன்னூறுகளில் டிவி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஸ்வீடன் வானொலியில் பணியாற்றினார். ஒரு பயணத்தின்போதுதான் சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற படத்துக்கான கதைக்கரு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை முடிக்க அவருக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    ஆனால் அதற்கான பலன் கிடைத்துவிட்டது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற ஸ்வீடிஷ்காரர் என்ற பெருமையைப் பெற்றார் பென்ட்ஜொலல்.

    அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பென்ட்ஜொலல் மரணம் அனைவரையும் உறைய வைத்துள்ளது என்று ஸ்வீடிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

    திருமணமாகாத அவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.

    English summary
    Malik Bendjelloul, the acclaimed Swedish film director behind the Oscar-winning music documentary "Searching for Sugar Man" has died. He was 36.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X