twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூங்காற்று முதல் தென் மேற்குப் பருவக் காற்று வரை.. வைரமுத்துவுக்கு கிடைத்த 6 தேசிய விருதுகள்!

    |

    சென்னை: கடந்த 13ம் தேதி கவிஞர் வைரமுத்து தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கவிப்பேரரசு என சிறப்பிக்கப் படும் வைரமுத்துவின் பிறந்த தினம், தமிழ் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டது.

    மிகச் சிறந்த பாடல்களை எழுதியதற்காக இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வைரமுத்து.

    இதோ, அவை எவை என தெரிந்து கொள்வோமா....

    முதல் விருது ‘பூங்காற்றுக்கு’...

    முதல் விருது ‘பூங்காற்றுக்கு’...

    முதல் மரியாதை படத்தில் வரும் ‘பூங்காத்து திரும்புமா.....' என்ற பாடல் தான் முதன் முதலில் வைரமுத்துவுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது.

    சின்ன சின்ன ஆசை...

    சின்ன சின்ன ஆசை...

    அதனைத் தொடர்ந்து ரோஜா படத்தில் வரும், ‘சின்னச் சின்ன ஆசை...' பாடல் தேசிய விருதுக்குத் தேர்வானது.

    கருத்தம்மா...

    கருத்தம்மா...

    மூன்றாவது தேசிய விருது பெண் சிசுக் கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியான கருத்தம்மா படத்தில் வரும், ‘போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்குக் கிடைத்தது.

    சங்கமம்...

    சங்கமம்...

    நான்காவது தேசிய விருதை சங்கமம் படத்தில் வரும் ‘முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்..' என்ற பாடல் வாங்கிக் கொடுத்தது.

    தெய்வம் தந்த பூவே...

    தெய்வம் தந்த பூவே...

    கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..' பாடல் மூலம் ஐந்தாவது முறையாக தேசிய விருது கிடைத்தது.

    தென்மேற்கு பருவக்காற்று...

    தென்மேற்கு பருவக்காற்று...

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் வரும், ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே' பாடல் வைரமுத்துவுக்கு ஆறாவது தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது.

    English summary
    The poet Vairamuthu has won many awards in his carrier including six national awards by central government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X