twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ரீத்தி, வாடியா சண்டையை விலக்கிவிட்ட ஐபிஎல் சிஓஓவிடம் வாக்குமூலம் பெற போலீஸ் திட்டம்

    By Siva
    |

    மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

    இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா பொது இடத்தில் தன்னை மிரட்டி, பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீசில் புகார் கொடுத்தார்.

    Preity Zinta molestation case: Police record statement of two persons

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மே 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நெஸ் வாடியா ப்ரீத்தியிடம் தகராறு செய்ததை நேரில் பார்த்த 2 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் யார், அவர்கள் என்ன கூறினார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடந்த ஐபிஏல் வீரர்கள் ஏலத்தின்போதும் ப்ரீத்தியும், நெஸ் வாடியாவும் சண்டை போட்டுள்ளனர். அவர்களின் சண்டை மோசமடைந்ததால் ஐபிஎல் சிஓஓ சுந்தர் ராமன் தலையிட்டு அவர்களை விலக்கி வைத்துள்ளார். இதனால் ப்ரீத்தி விவகாரம் தொடர்பாக சுந்தர் ராமனிடம் வாக்குமூலம் வாங்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.

    தற்போது அமெரிக்காவில் இருக்கும் ப்ரீத்தி நாடு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகே போலீசார் நெஸ் வாடியாவிடம் விசாரணை நடத்த திட்டமிள்ளார்கள்.

    English summary
    Mumbai Police have recorded statements of two persons in connection with the alleged molestation of Preity Zinta by her former boyfriend and industrialist Ness Wadia, but is unable to reach the Bollywood actor as she is out of the country. Police are planning to record the statement of IPL COO Sundar Raman also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X