twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் ஷூட்டிங்.. அனுமதி கோரி ஜெ.வுக்கு பெட்டிஷன் போட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்!

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னையில் படப்பிடிப்பு நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் முதல்வர் தனிப்பிரிவில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில்,

    நலிந்து கிடந்த தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஊக்கமளிக்க சிறந்த திரைப் படங்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்படுகிறது. கதையின் பின்புலம், ஒருசில தணிக்கை குழு உறுப்பினர்களின் மனோ பாவம் காரணமாக சில நல்ல படங்களுக்கும் 'யு/ஏ' சான் றிதழ் கிடைக்கிறது. இந்த சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது.

    இதைத் தவிர யு' சான்றிதழ் படங்களுக்கும், 'யு/ஏ' சான்றிதழ் படங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் விருதுகள் 'யு/ஏ' சான்றி தழ் படங்களுக்கும் வழங்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள யு/ஏ சான்றிதழ் படங்களுக்கும் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கவேண்டும்.

    திருட்டு விசிடி, கேபிள் டிவி மற்றும் தனியார் பஸ்களில் திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை திரையிடுவதை தடுக்க வேண்டும்.

    சென்னை மாநகரில் தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு அண்டை மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். ஆனால், சிறுபட்ஜெட்டில் படங்கள் எடுப்பவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

    ஆகவே, சென்னையில் (மெட்ரோ ரயில் பணிகள் நடக் கும் இடங்கள் தவிர்த்து) படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Film personalities have urged the state govt to give permission for film shootings in Chennai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X