twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை தரும் 'புலிப்பார்வை'! - இயக்குநர் பிரவீண்காந்த்

    By Shankar
    |

    ஈழப் போரின்போது சிங்கள ராணுவத்தில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரனைப் பற்றி ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு புலிப்பார்வை என பெயரிட்டுள்ளனர்.

    'ரட்சகன்', 'ஸ்டார்' போன்ற படங்களை இயக்கிய பிரவீன்காந்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    பாலச்சந்திரன் மரணத்துக்கு மறுவிசாரணை

    பாலச்சந்திரன் மரணத்துக்கு மறுவிசாரணை

    இன்று சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரவீண் காந்தி கூறுகையில், "ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.

    புலி வளர்த்த பிள்ளை

    புலி வளர்த்த பிள்ளை

    பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் எப்படி பிடித்தது, அவன் தந்தையால் எப்படி வளர்க்கப்பட்டான் என்ற சம்பவங்களை திரைக்கதையாக தொகுத்துள்ளேன். இதற்காக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம், என்றார்.

    வைகோ, சீமானிடம் அனுமதி

    வைகோ, சீமானிடம் அனுமதி

    படம் வெளியாக எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக தனது நண்பரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி பெற்றுள்ளார் இயக்குனர் பிரவீன்காந்த். இன்னும் தமிழ் தேசிய உணார்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களிடமும் இப்படத்தைப் பற்றிய விவரங்களை பேசி வருகின்றனர்.

    எதுக்கு வம்பு

    எதுக்கு வம்பு

    இப்படத்தில் இந்திய நாட்டுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லாததால், சென்சார் வாங்குவது சுலபமாக இருந்ததாகவும் சென்சார் உருப்பினர்கள் படத்தைப் பாராட்டினார்கள் என்பதையும் இயக்குனர் தெரிவித்தார். எதற்கு வம்பு என்று 'வீ லவ் இந்தியா' என்ற கருத்தையே இப்படம் பேசுவதாக பிரவீண்காந்த் தெரிவித்தார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    புலிப்பார்வை படம் வெளியானதும் இது உலகத்தமிழர்களிடையே ஒரு பெரிய பாய்ச்சலை உண்டாக்கும் என்கிறார் இயக்குனர். பாலச்சதிரனைப் போலவே இருக்கும் பாலா என்ற சிறுவனை தேர்தெடுத்து இதில் நடிக்க வைத்துள்ளனர்.

    இதன் படப்பிடிப்பு கேரளாவிலும், ஒரு சில காட்சிகளை இலங்கையிலும் படமாக்கியுள்ளனர். இந்த படம் இந்தியாவுக்கு விடுதலை புலிகள் எதிரிகள் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறதாம்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    பாலச்சந்திரனாக நடித்துள்ள சிறுவன் சத்யா பேசுகையில், "இந்த படம் பிரபாரகன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்று தெரிந்ததால், எப்படியாவது இந்தப் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று இறைவனை பிரார்த்தினேன். அது தற்போது நிறைவேறியுள்ளது," என்றான்.

    English summary
    Praveen Kanth, who gave films like Ratchagan is making a movie on the cruel murder of Balachandiran, son of LTTE chief Prabhakaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X