twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'உறுமீன்' படத்தில் புறநானூற்றுப் பாடல்!

    By Shankar
    |

    பொருளாதார குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி வரும் உறுமீன் படத்தில், புறநானூற்று வரிகளை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்கள்.

    ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார்.

    சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமா குமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

    ஒரு முன்னணி கதாநாயகர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அச்சு இசையமைக்கிறார்.

    படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    Purananooru song in Urumeen

    படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.

    இத் திரைப்படம் 1990 - 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரணகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்படுகிறது.

    அப்போ, அமலாக்கப் பிரிவெல்லாம் வருமே... பக்கா அரசியல் படம்னு சொல்லுங்க!

    Read more about: urumeen உறுமீன்
    English summary
    Urumeen is the movie based on Economic offence cases during the period of 1990-2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X