twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவா திரைப்பட விழாவில் தங்கமீன்கள்.. தமிழில் பேசிய இயக்குநர் ராம்!

    By Shankar
    |

    கோவா: கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் தங்க மீன்கள் படம் நேற்று திரையிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ராம், தமிழில் பேசி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

    ஒரே தமிழ்ப் படம்

    ஒரே தமிழ்ப் படம்

    44வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள், மொழிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்ப் படம் ‘தங்க மீன்கள்'தான்.

    சர்ச்சையை சந்தித்த படம்

    சர்ச்சையை சந்தித்த படம்

    தங்க மீன்கள் படத்தை கவுதம் மேனனின் போட்டான் கதாஸ் தயாரித்து, பின் ஜேஎஸ்கே பிலிம்ஸுக்கு விற்றுவிட்டது. படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி இருந்ததால், எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் அதுகுறித்த ராமின் விமர்சனங்களுக்கிடையிலும் நல்ல வசூலைப் பெற்றது.

    சர்வதேச ரசிகர்கள்

    சர்வதேச ரசிகர்கள்

    ஆங்கில சப் டைட்டிலுடன் நேற்று ஐநாக்ஸ் அரங்கில் திரையிடப்பட்ட தங்கமீன்களைப் பார்க்க பல்வேறு மொழியைச் சேர்ந்த ரசிகர்களும் வந்திருந்தனர். மீண்டும் 29ம் தேதியன்றும் படம் திரையிடப்பட இருக்கிறது.

    இயக்குநர் ராம்

    இயக்குநர் ராம்

    படத்தின் திரையிடலுக்கு முன் இயக்குனர் ராம், படத்தில் நடித்திருந்த பத்மப்ரியா, ஷெல்லி, படத்தை வெளியிட்ட ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் ஆகியோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழில்...

    தமிழில்...

    "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று" என தமிழில் தன் பேச்சைத் தொடங்கிய ராம், 'ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் என் மொழியான தமிழில் பேச வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்கிறேன்," என்றார்.

    English summary
    Director Ram's Thangameenkal was screened in International Film Festival of India, Goa, in the Indian Panorama section. Inox theatre was houseful with audience from various parts of the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X