twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்கிலாந்து வெள்ளையரை இந்திய காந்தியாக்கிய அட்டன்பரோ.. ஒரு சாதனை சரித்திரம்!

    |

    லண்டன்: பல்வேறு விமர்சனங்களுக்கும், பாராட்டுதலுக்கும் ஆளான காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ இன்று மறைந்தார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜூராசிக் பார்க், தி கிரேட் எஸ்கேப் படங்களில் நடித்துள்ளார் ரிச்சர்ட் அட்டன்பரோ.

    இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கி, ஆஸ்கார் விருது வாங்கினார் அட்டன்பரோ. அதில் காந்தி வேடத்தில் வெள்ளையரை நடிக்க வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் அவர்.

    1982ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆனது காந்தி திரைப்படம். இந்தியாவில் ரிலீசானதிலிருந்து மூன்று நாட்கள் கழித்து அதாவது டிசம்பர் 3ம் தேதி இங்கிலாந்திலும், டிசம்பர் 6ம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் ஆனது.

    சிறப்புக் காட்சி...

    சிறப்புக் காட்சி...

    முன்னதாக டிசம்பர் 2ம் தேதி லண்டனின் ஓடன் லைசெஸ்டர் சதுக்கத்தில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அவரது மனைவி டயானா ஆகியோர் கலந்து கொண்டனர்,

    அமோக ஆதரவு...

    அமோக ஆதரவு...

    அதேபோல், அமெரிக்காவில் முதலில் குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட திரையரங்குகளில் மட்டுமே காந்தி படம் திரையிடப்பட்டது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் ஜனவரி மாதம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் காந்தி படம் திரையிடப்பட்டது.

    8 விருதுகள்...

    8 விருதுகள்...

    11 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட காந்தி படம், எட்டு விருதுகளைத் தட்டிச் சென்றது. சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை அட்டன்பரோ பெற்றார். அதேபோல், சிறந்த படம், சிறந்த உண்மைத் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கலை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த உடையலங்காரம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய விருதுகளையும் பெற்றது.

    கனவுப் படைப்பு...

    கனவுப் படைப்பு...

    காந்தி திரைப்படம் அட்டன்பரோவின் கனவுப் படைப்பாக இருந்தது. இப்படத்தை உருவாக்குவதற்காக பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் அட்டன்பரோ. ஊடகத் தகவல்களின் படி ஏற்கனவே காந்தியின் வரலாற்றைப் படமாக்கும் முயற்சி இரண்டு முறை தோல்வியில் முடிந்துள்ளது.

    18 ஆண்டுகள்...

    18 ஆண்டுகள்...

    காந்தி படத்தை உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம் அட்டன்பரோ. பல எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி இன்றும் மகாத்மாவின் வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு வரும் படைப்பாக காந்தி திரைப்படம் உள்ளது.

    English summary
    The director of the critically acclaimed and widely appreciated film 'Gandhi', Richard Attenborough passed away on August 25, 2014. Richard also acted in films like 'Jurrasic Park', 'Miracles on 34th Street', '10 Rillington Place' and 'The Great Escape' but it was his directorial venture with 'Gandhi' that won him accolades. We remember actor, director Richard Attenborough and list down a few lesser known facts about his Oscar winning film 'Gandhi'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X