twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டை விற்று சினிமா எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!- சாய்ந்தாடு சாய்ந்தாடு தயாரிப்பாளர்

    By Shankar
    |

    சென்னை: சாய்ந்தாடு சாய்ந்தாடு படப்பிடிப்பில் திடீரென்று உள்ளே நுழைந்து பெப்சி தொழிலாளர்கள் தகராறு செய்தனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பெப்சி தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கஸாலி.

    அவர் அனுப்பிய புகார் கடித விவரம்:

    நான் எச் 3 சினிமாஸ் சார்பாக 'சாய்ந்தாடு சாய்ந்தாடு'என்ற தமிழ் திரைப்படம் எழுதி, தயாரித்து, இயக்கிக்கொண்டிருக்கிறேன்.

    நான் அடிப்படையில் பி.எஸ்.ஸி அக்ரி முடித்துவிட்டு 15 வருடங்கள் துபாயில் சொந்தமாகக் கம்பெனி நடத்திவிட்டு, சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் சென்னை வந்து, சிறிது காலம் சில படங்களில் நட்பு ரீதியில் பணியாற்றி, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டு, சமீபத்தில் மேற்சொன்ன சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற தமிழ் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    தற்சமயம் படங்களுக்கு புரமோஷன் மிக அவசியம் என்பதை உணர்ந்து, டீஸர், டிரெய்லர் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று நிகழ்த்தி படத்தினை உயர்த்துவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.

    ஏமாற்றிய புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ்

    ஏமாற்றிய புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ்

    எனது படத்தில் திரு கந்தவேல் என்பவரை புரடக்சன் எக்சிகியூட்டிவாக நியமித்தேன்.

    - அவர் சரியானபடி கொடுத்த வேலையைச் செய்யவில்லை,

    - செலவினத்தில் நிறைய கையாடல் செய்தார். கேட்டதற்கு, ‘அப்படித்தான் செய்வேன், ஏதாவது தகராறு செய்தால் யூனியனிடம் சொல்லி படத்தை எடுக்க முடியாமல் செய்து விடுவேன்' என்று மிரட்டினார்.

    - போஸ்ட் புரடக்ஷன் வேலைக்கு எந்தவொரு தகவலும், உதவியும் செய்யவில்லை. கேட்டால், சில கம்பெனிகள் கொடுத்த பட்ஜெட்டை அதிகப்படுத்திக் கூறி மலைக்க வைத்தார். டப்பிங் பேசுவதற்கு நடிகரின் தொடர்பு எண் கேட்டேன். தர மறுத்துவிட்டார். எனவே எனக்கு தெரிந்த வரையில் சொந்த முயற்சியில் அந்த வேலைகளைச் செய்தேன்.

    - கடந்த டிசம்பர் மாதம் பாடல் வெளியிட்டோம். அதற்கும் வராமல், மற்றவர்களையும் வராமல் தடுக்க முயன்றார்.

    இதுவரை கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஏற்கெனவே உடன் வேலை பார்த்த கந்தவேல் & அவரது குழு ஒழுங்காக செயல்படாமல் நிறைய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். மீண்டும் இவர்களை வைத்து செயல்பட்டால், செலவு மிக அதிகமாகி என்னால் முழுமையாக படம் முடித்து வெளிவரமுடியாத நிலை ஏற்படும். எனவே, ப்ரமோஷன் படப்பிடிப்புக்கு, வேறு சிறிய டீமை ஏற்பாடு செய்தேன்.

    தகராறு

    தகராறு

    நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு டூரிசம் ரிசார்ட்டில் படத்தின் புரமோசனுக்காக, டூரிசம் டிபார்ட்மெண்ட்டில் முறையான அனுமதி பெற்று, ஒரு சிறிய குழுவை வைத்து படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்தேன். படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில்,

    கந்தவேல், புரடக்சன் எக்சிகியூட்டிவ், 2. கே.எஸ். சரவணன், துணை இயக்குநர், சிவா, ஒளிப்பதிவாளர் மூவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, மிரட்ட ஆரம்பித்தனர். அப்போது கந்தவேல் ‘ஏற்கெனவே சொன்னது காதில் ஏறவில்லையா? படம் முடிவது பற்றிக் கவலை இல்லை. மீதம் கொடுக்க வேண்டிய எல்லா பணத்தையும் இப்போதே கொடுத்துவிட வேண்டும்' என்றார்.

    நான் ‘ஏற்கெனவே நீங்கள் பேசிய தொகையைவிட அதிகம் எடுத்துக்கொண்டீர்கள், ஆனாலும் பரவாயில்லை, இப்போது கொஞ்சம் பணம் தருகிறேன். மீதம் கொஞ்சம் கொஞ்சமாக படம் வெளியிடும் முன்பு தந்து முடித்துவிடுகிறேன்' என்று சொன்னேன். அவர் மறுத்துவிட்டு, தகராறில் ஈடுபட்டார். ஆரம்பித்த படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.

    உங்கள மாதிரி ஆட்கள் பயப்படணும்

    உங்கள மாதிரி ஆட்கள் பயப்படணும்

    பிரச்சனை நீண்டுகொண்டே சென்று என் பணமெல்லாம் விரயமாகிக் கொண்டிருந்தது. நான் ‘நீங்கள் முறைப்படி சங்கத்தில் புகார் கொடுங்கள், அங்கு பேசி முடித்துக்கொள்ளலாம், இப்போது படப்பிடிப்புத் தளத்தில் தகராறு செய்தால் எனக்கு பணம் விரயமாகிறது' என்றேன். அதற்கு அவர் ‘அதுதானே எனக்கு வேண்டும், உங்களை மாதிரி சின்ன தயாரிப்பாளர்கள் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்,' என்றார்.

    அமீர் பற்றி அசிங்க வார்த்தைகள்

    அமீர் பற்றி அசிங்க வார்த்தைகள்

    நான் ‘ஃபெஃப்ஸி'யின் தலைவர் அமீரிடம் முறையிடுவேன்' என்றேன். அதற்கு அவர், தலைவரைப்பற்றி சொன்ன வார்த்தைகளை இங்கு எழுதுவது நாகரீகமாக இருக்காது.

    நான் காவல் நிலையம் சென்றேன். காவலர்கள் வந்தார்கள். அப்போது மணி மாலை 4 ஆகிவிட்டது. ஏற்கெனவே படப்பிடிப்பு நடக்கவில்லை, செலவு செய்த பணமெல்லாம் விரயமாகிவிட்டது, மனம் வெம்பிப்போய் இருந்த நான், அப்படியே படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பிவிட்டேன். அதனால் எனக்கு பண விரயம், குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி என் படத்தை சந்தைக்கு விற்க முனைவதில் தாமதம், மனகுழப்பம், எனக்குக் கடன் கொடுத்த உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் என்னைப்பற்றிய அவ நம்பிக்கை இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலம் பற்றிய பயத்துடனும், மனக் கலக்கத்திலும் இருக்கிறேன்.

    நேற்று என்னை தரக்குறைவாகப் பேசியவர், இன்றும் மதியம் 12.42க்கு போனில் அழைத்து மீண்டும் தகாத வார்த்தைகளில் மிகக் கேவலமாகப் பேசினார். நான் எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்.

    புரியவே இல்லீங்க

    புரியவே இல்லீங்க

    எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை:

    வேறு எந்தத் துறையிலாவது பெரும் பணம் முதலீடு செய்த முதலாளிகள் (தயாரிப்பாளர்கள்) இப்படிப்பட்ட கேவலமான பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பார்களா? இந்நேரம் வீணாக தொந்தரவு செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்க மாட்டார்களா?

    பெரிய அளவுக்கு பணத்தைப் போட்டுவிட்டு மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம்' என்று இருக்கும் இந்த சினிமா துறைக்கு வந்து, என் உழைப்பு, நேரம், பணம் இவற்றையெல்லாம் கொட்டியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

    ஒரு படைப்பாளியாய் சினிமாவுக்கு வந்து, இப்படிப்பட்டவர்களுடன் மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணி வருத்தப்படுகிறேன்.

    வீட்டை விற்றேன்

    வீட்டை விற்றேன்

    இந்த சாய்ந்தாடு சாய்ந்தாடு திரைப்படம் தயாரிப்பதற்காக கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டிருக்கிறேன். விருதுநகரில் நான் குடியிருந்த வீட்டை விற்றிருக்கிறேன். தங்க நகைகளை அடமானம் வைத்திருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நிறைய கடன் வாங்கியிருக்கிறேன்.

    மாதா மாதம் வட்டி கட்ட முடியாமலும், படத்தை முடித்து வெளியே கொண்டு வரமுடியாமலும் திணறிக்கொண்டிருக்கிறேன். இந்த புரமோசனுக்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறேன். இந்த விபரங்கள் எல்லாம் அந்த மூன்று பேருக்கும் தெரியும். இவையெல்லாம் தெரிந்தும் அவர்கள் இப்படி நடந்துகொண்டால் அவர்களைப்பற்றி நான் என்ன நினைப்பது? அவர்களின் மேற்படி செயல்பாட்டை நான் எப்படி எதிர்கொள்வது?

    ஞரூ 95 ஆயிரம் நஷ்டம்

    ஞரூ 95 ஆயிரம் நஷ்டம்

    ஏற்கெனவே கோடியில் முதலீடு செய்து, இதுவரை ஒரு ரூபாய்கூட வரவு இல்லாத நிலையில், மேலும் நேற்று இவர்கள் எனக்கு ஏற்படுத்திய ரூபாய் 95,000/- வரை நஷ்டத்தை நான் எப்படி பொறுத்துக்கொள்வது? சங்கம் இவர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டுகிறேன்.

    படைப்பாளிக்கும் மரியாதை இல்லை, போட்ட பணத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இப்போது நான் என்ன செய்ய?

    ஏற்கெனவே விசயம் பல இடங்களுக்குப் பரவ ஆரம்பித்துவிட்டது.

    எனக்கோ, என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மேற்சொன்ன மூவரும்தான் காரணம்.

    ஃபெஃப்ஸி அமைப்பு விசாரித்து, படைப்பாளி & சிறிய தயாரிப்பாளரான எனக்கு நல்ல முன்னோடியான தீர்வைத் தரும் என்று மனமார நம்புகிறேன்..."

    -இப்படி எழுதியுள்ளார் அவர்.

    சின்ன பட்ஜெட் படங்கள் பற்றித்தான் அத்தனை விழாக்களிலும் திரையுலக சங்கங்களின் நிர்வாகிகள் பெரிதாகப் பேசுகிறார்கள். ஆனால் அந்த சின்னப் படத்தை உருவாக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு இத்தனை சங்கடங்கள் நேர்ந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே!

    English summary
    Sainthadu Sainthadu producer & director Kasali filed complaint on Fefsi members for disturbing shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X