twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடல் முழுவதும் ரோமங்களுடன் ‘ஓநாய்’ தோற்றத்தில் விக்ரம்... ‘ஹல்க்’ படத்தின் தாக்கமா ‘ஐ’?

    |

    சென்னை: பிரபல ஹாலிவுட் படமான 'ஹல்க்'கின் தாக்கம் ஷங்கரின் ஐ படத்தில் காணப்படுவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

    நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

    இந்நிலையில், சுமார் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய டீசர் பத்திரிக்கையாளர்களுக்கு என்று பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.

    ஓநாய் தோற்றம்...

    ஓநாய் தோற்றம்...

    அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.

    கதைக்களம்...

    கதைக்களம்...

    தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரனை குறித்து அறிவியல் பரிசோதனை செய்யும் கதைக்களம் தான் ‘ஐ' எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்கட்டு கொண்டவராக காட்சி தருகிறார் என தகவல்கள் வெளியாயின.

    ஜிம்மில் குடியிருந்த விக்ரம்...

    ஜிம்மில் குடியிருந்த விக்ரம்...

    இப்படத்திற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் கிடந்து உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் விழாக்களில் அவ்வப்போது தலைகாட்டினார்.

    டீசர்...

    டீசர்...

    ஆனால், விக்ரமின் அந்த தோற்றத்தில் உள்ள காட்சிகள் இல்லாமல் அவர் ஒழுங்கற்ற வகையில், அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் காட்சி தரும் காட்சிகள் டீசரில் வெளியிடப்பட்டது.

    ஹல்க்கின் தாக்கம்...

    ஹல்க்கின் தாக்கம்...

    இந்த டீசருக்காக டம்மியான இசை பின்னணியில் ஒலிக்க செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இப்படத்தில் ஹாலிவுட்டில் ஹிட் ஆன ஹல்க் படத்தின் சாயல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என கருத்து பரிமாறிக் கொண்டனர்.

    English summary
    With Shankar's Ai starring Vikram and Amy Jackson in the lead confirmed to hit the screens for Deepavali, the buzz around the film has increased. Meanwhile the makers have showcased a 50 second teaser of the the magnum opus with dummy music for a select few from the press. The teaser gives the impression that the film might actually be inspired from the Hollywood blockbuster movie 'Hulk'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X