twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா... வந்த நட்சத்திரங்களும் வராத சூப்பர் ஸ்டார்களும்!

    By Shankar
    |

    டெல்லி: பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற விழாவில் பல இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமிதாப், ரஜினி பங்கேற்கவில்லை.

    டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள், மதத்தலைவர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

    இவர்களிடையே விழா அரங்கில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் பலரையும் காண முடிந்தது. மத்திய அரசின் அழைப்பை ஏற்று இவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    சல்மான்கான்

    சல்மான்கான்

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தனது தந்தையும், சினிமா வசன கர்த்தாவுமான சலீம்கானுடன் விழாவுக்கு வந்திருந்தார். இருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்த வரிசையின் பின்பக்கத்தில் இருந்தனர்.

    ஹ்ரித்திக்

    ஹ்ரித்திக்

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் தனது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனுடன் வந்திருந்தார்.

    இதேபோல் இன்னொரு பிரபல நடிகர் அனுபம் கெர் தனது மனைவி கிரன் கெருடன் விழாவில் கலந்து கொண்டார். கிரன் கெர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் சண்டிகார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவேக் ஓபராய்

    விவேக் ஓபராய்

    நடிகர் விவேக் ஓபராய், டெல்லி ராஜ்ய சபை எம்.பி.க்கள் என்ற முறையில், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் தெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். மோடியின் தீவிர ஆதரவாளரான விவேக் ஓபராய் தனது சட்டையில் தாமரை சின்னத்தை அணிந்து வந்திருந்தார்.

    ஹேமமாலினி - தர்மேந்திரா

    ஹேமமாலினி - தர்மேந்திரா

    இவர்களைத் தவிர, பா.ஜனதாவில் உள்ள சினிமா நட்சத்திரங்களான, பரேஷ் ரவால், சத்ருகன் சின்கா, வினோத் கன்னா, ஸ்மிரிதி இரானி போன்றோரும் விழாவில் பங்கேற்றனர். நடிகர் தர்மேந்திரா தனது மனைவியும் பாஜக எம்பியுமான ஹேமமாலினியுடன் விழா அரங்கில் அமர்ந்திருந்தார்.

    இதேபோல், இந்தி பட அதிபர் மதூர் பந்தார்கர், இசையமைப்பாளர் பப்பி லஹிரி, பூனம் தில்லான், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி ஆகியோரும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    அமிதாப்

    அமிதாப்

    மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    எனினும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. அமிதாப்பச்சன், தான் படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் விரைவில் தங்களை சந்திப்பேன் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ரஜினி

    ரஜினி

    இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதால் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று ரஜினிகாந்த்தை தமிழ்நாட்டில் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி இருந்ததால் இதில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷை விழாவில் பார்க்க முடிந்தது. மனைவி லதா ரஜினி கலந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரை விழாவில் காண முடியவில்லை.

    லதா மங்கேஷ்கர்

    லதா மங்கேஷ்கர்

    84 வயது லதா மங்கேஷ்கர் தனது உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தான் கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் லதா மங்கேஷ்கர்.

    English summary
    Many Bollywood actors have attended Narendra Modi's swearing in ceremony as Prime Miniter at Rashtrapathy Bhavan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X