twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவை 'புரட்சி' படுத்தும் பாடு!

    By Shankar
    |

    புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை.

    ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.

    புரட்சித் தலைவர்

    புரட்சித் தலைவர்

    புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம்.

    அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!).

    புரட்சிக் கலைஞர்

    புரட்சிக் கலைஞர்

    எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

    புரட்சி நாயகன்

    புரட்சி நாயகன்

    இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது.

    இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்.

     புரட்சித் தளபதி

    புரட்சித் தளபதி


    இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!

    புரட்சித் தமிழன்

    புரட்சித் தமிழன்

    இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.

    புரட்சி இயக்குநர்

    புரட்சி இயக்குநர்

    இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.

    புரட்சித் திலகம்

    புரட்சித் திலகம்

    இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார்.

    என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.

    புரட்சித் தலைவி...

    புரட்சித் தலைவி...

    சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!

    English summary
    Puratchi is the word often used by Tamil cinema actors and directors as title before their name. Here is an analysis of some Puratchi title holders. puratchi, title, tamil cinema, mgr, jayalalithaa, தமிழ் சினிமா, புரட்சி தலைவர், எம்ஜிஆர்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X