twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களைக் கேவலமாக சித்தரிக்கும் பாலிவுட் படங்கள்... லீனா பாய்ச்சல்

    By Sudha
    |

    ஜாம்ஷெட்பூர்: சமீபத்தில் வெளியான மெட்ராஸ் கபே மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு படங்களையும் தமிழர்களை மிகவும் மோசமான கோணத்தில் சித்தரித்துள்ளன. மேலும் தமிழர்களின் பிரச்சினைகளையும் அவை தரம் தாழ்ந்து காட்டியுள்ளன. தமிழர்களைப் பற்றியும், தமிழர்களின் பிரச்சினை பற்றியும் அரைவேக்காட்டுத்தமான அறிவையே பாலிவுட் உலகினர் கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று எழுத்தாளர், கவிஞர், குறும்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை குமுறியுள்ளார்.

    ஜாம்ஷெட்பூரில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள லீனா இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

    தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான படங்கள் இவை என்றும் அவர் கடுமையாக சாடினார்.

    லீனாவின் பேட்டியிலிருந்து...

    அறிவே இல்லை

    அறிவே இல்லை

    போதிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் இந்தப் படங்களைக் கொடுத்துள்ளனர். தமிழர்கள் குறித்த சித்தரிப்பு இதில் மோசமாக இருந்தது.

    தவறு, கொடூரமானது, அவமானகரமானது

    தவறு, கொடூரமானது, அவமானகரமானது

    தமிழ் மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், தவறான பார்வையில் சித்தரிப்பதாகவும்தான் மும்பையிலிருந்து சிலர், தமிழ்நாட்டைப் பற்றியப் படங்களைத் தயாரிக்கிறார்கள்.

    வருத்தமாக இருக்கிறது

    வருத்தமாக இருக்கிறது

    இது வருத்தம் தருகிறது. ஆனால் உண்மை இதுதான்.

    மீனவர் படுகொலையில் அமைதி

    மீனவர் படுகொலையில் அமைதி

    தமிழக மீனவர்கள் கடந்த 1980களிலிருந்தே தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படைதான் இதைச் செய்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் தமிழக அரசு உள்பட அனைவருமே இதில் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

    அமைதியை உடைக்கும் எனது படம்

    அமைதியை உடைக்கும் எனது படம்

    நான் இந்தக் கருவை வைத்தே எனது தி டெட் சீ படத்தைத் தயாரித்தேன். தமிழக மீனவர்களின் அவலம், இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை ஆகியவற்றை மையமாக வைத்தே இப்படம் உருவானது. இதன் மூலம் இந்தப் பிரச்சினையில் நிலவி வந்த அமைதியை எனது படம் உடைத்துள்ளது என்றார் லீனா.

    English summary
    Tamil filmmaker Leena Manimekalai has slammed two recent Hindi films 'Madras Cafe' and 'Chennai Express' for portraying Tamil issues in a distorted way, based on inadequate research.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X