twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிகிர்தண்டா.... தயாரிப்பாளரின் பக்கா திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றி!

    By Shankar
    |

    ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு திரைப்படத்தை தயாரித்தால் மட்டும் போதாது... அதை பக்காவாகத் திட்டமிட்டு வெளியிடத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியப்படும். குறைந்தபட்சம் நஷ்டத்திலிருந்தாவது தப்பிக்கலாம்.

    சமீபத்தில் வெளியான இரு திரைப்படங்கள் வேலையில்லா பட்டதாரி மற்றும் ஜிகிர்தண்டா. இந்தப் படங்களின் வெளியீட்டில் சில சர்ச்சைகள் நிலவின. அது புரிதல் இல்லாத, வெற்று ஆத்திரத்தில் எழுந்த சர்ச்சைகள்.

    ஆனால் தயாரிப்பாளரின் தெளிவான முடிவு இரு படங்களையுமே மெகா வெற்றிப் படங்களாக்கியுள்ளது.

    வேலையில்லா பட்டதாரி

    வேலையில்லா பட்டதாரி

    தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம்தான் முதலில் வெளியானது. இது தனுஷின் சொந்தப் படம். அதற்கு அடுத்த வாரத்தில் பீட்சா படம் தந்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா வெளியாவதாக திட்டம். இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஆடுகளம் கதிரேசன். தனுஷின் நண்பர் மட்டுமல்ல, தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்தவர். அடுத்த படத்தைத் தயாரிக்கவிருப்பவர்.

    தனுஷ் வேண்டுகோள்

    தனுஷ் வேண்டுகோள்

    வேலையில்லா பட்டதாரி, அதிக அரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது. இந்த வசூல் மற்றும் திரையரங்குகளைத் தக்க வைத்துக் கொள்ள, ஜிகிர்தண்டா படத்தின் வெளியீட்டை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டார் தனுஷ்.

    தள்ளி வைப்பு ஏன்?

    தள்ளி வைப்பு ஏன்?

    இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஜிகிர்தண்டா திட்டமிட்டபடி அதே வாரம் வெளியானால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலிருந்தது. அத்தனை அரங்குகளும் வேலையில்லா பட்டதாரி மற்றும் சதுரங்க வேட்டை படங்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்தன.

    எனவே ஒரு வாரம் தள்ளி வெளியானால் கூடுதலாக திரையரங்குகள் கிடைக்கும் சூழல். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஜிகிர்தண்டாவை ஒரு வாரம் மட்டும் தள்ளி வெளியிட்டார் கதிரேசன்.

    சதி?

    சதி?

    ஆனால் அதற்குள் என் படத்தை முடக்க தயாரிப்பாளரே சதி செய்கிறார் என ஜிகிர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும், ஹீரோவான சித்தார்த்தும் குமுறித் தள்ளினர்.

    இந்த குமுறல் புரிதலின்மையால் வந்தது. அதைத்தான் ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசன் தெளிவாக விளக்கி அறிக்கையும் தந்தார்.

    அது என் படம்ங்க!

    அது என் படம்ங்க!

    "ஜிகிர்தண்டா என் படம். கோடிகளைக் கொட்டித் தயாரித்திருக்கிறேன். எனக்கு நானே சதி செய்து கொள்வேனா? வேலையில்லா பட்டதாரி நன்றாக ஒடிக் கொண்டிருக்கிறது. அந்த வீச்சில் இந்தப் படம் பாதிக்கக் கூடாது. மேலும் அதிக தியேட்டர்கள் வேண்டும். அதற்காக ஒரு வாரம் தள்ளி வெளியிடலாம் என முடிவு செய்தேன். இதில் என்ன சதி இருக்கிறது? அப்படி தள்ளி வெளியிட்டதால்தான் இன்று ஜிகிர்தண்டா அதிக அரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. மேலும் படம் வெளியான இரண்டாவது வாரம் மேலும் 60 அரங்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளது. இந்தத் திட்டமிடல் இருந்தால் மட்டுமே நல்ல படங்கள் கூட தப்பிக்க முடியும்", என்றார்.

    பக்கா ப்ளான் இருக்கணும்!

    பக்கா ப்ளான் இருக்கணும்!

    கதிரேசனின் இந்த நிலையை தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக ஆதரித்ததோடு, இந்த புரிதலோடு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட்டால் வெற்றியும் சாத்தியம், திரையுலகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றது. கூடவே, நடிகர் சித்தார்த்துக்கும் ஒரு பலமான குட்டு வைத்தது.

    வெறும் உணர்ச்சி வசப்பட்டு அறிக்கை கொடுப்பதால் படங்கள் ஓடிவிடாது. நேரம் பார்த்து, கிடைக்கிற அரங்குகளைப் பார்த்து வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டதால்தான் ஜிகிர்தண்டாவுக்கு ஜிலீர் வெற்றி கிடைத்திருக்கிறது.

    English summary
    The mega success of recently released Karthik Subbaraj's Jigirthanda is the best example for how to release a movie in proper plan and time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X