twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தி: முதல்வரை சந்திக்க விஜய் முயற்சி - தயங்கும் விஐபிக்கள்

    By Mayura Akilan
    |

    சென்னை: கத்தி படம் தொடர்பான பிரச்சினை தீர்க்க முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது உள்ளிட்ட முயற்சிகளில் நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.

    செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள பல வி.ஐ.பி.-க்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்க தயக்கம் காட்டி மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு செப்டம்பர் 18ஆம் தேதி சென்னையில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போது, சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் செப்.15 தேதியோடு நிறைவு பெறுகிறது.

    கத்திக்கு எதிர்ப்பு

    கத்திக்கு எதிர்ப்பு

    இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு எதிராக தற்போது பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    மாறிய இடம்

    மாறிய இடம்

    இதனையடுத்து லண்டனில் நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை, தற்போது சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

    விஐபிக்கள் தயக்கம்

    விஐபிக்கள் தயக்கம்

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் தங்கள் மீது தேவையில்லாத விமர்சனம் எழும் என்று வி.ஐ.பிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    முதல்வர் சந்திக்க முயற்சி

    முதல்வர் சந்திக்க முயற்சி

    'கத்தி' இசை வெளியீட்டு விழா அன்று, தமிழர் அமைப்புகள் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்க, தமிழக அரசின் உதவியை நாட இருக்கிறார்கள்.

    நேரம் ஒதுக்கவில்லை

    நேரம் ஒதுக்கவில்லை

    'தலைவா' படம் போல் அல்லாமல், குறிப்பிட்ட தேதியில் வெளியாக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் விஜய். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

    இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்டப் பணிகள் என படம் சம்பந்தமான பணிகள் அனைத்தையும் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கிறது படக்குழு. தீபாவளி திருநாளில் கண்டிப்பாக படத்தினை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்ற முயற்சியில் உள்ளனர்.

    சிக்கலின்றி ரிலீஸ் ஆகுமா

    சிக்கலின்றி ரிலீஸ் ஆகுமா

    செப்டம்பர் 18 ஆம் தேதி லீலா பேலஸ் அல்லது ஐ.டி.சி க்ராண்ட் சோழா இரண்டில் ஏதாவது ஓர் இடத்தில் 'கத்தி' இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழா சிக்கலின்றி அமைந்தால் மட்டுமே 'கத்தி' படத்தின் ரிலீஸ்க்கு எந்த சிக்கலும் இருக்காது என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Actor Vijay is attempting to meet CM Jayalalitha regarding his latest controversial movie Kaththi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X