twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த் நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்! - ஒரு புதுமுக இயக்குநரின் ஆதங்கம்

    By Shankar
    |

    'விஜயகாந்த் நடிக்காதது எங்களைப் போன்ற திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு இழப்புதான் 'என்று சினிமா விழாவில் ஆதங்கப்பட்டார் ஒரு புதுமுக இயக்குநர்.

    எண்டர் டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கே தயாரித்துள்ள படம் 'மறுமுகம்'. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.

    'மறுமுகம்' படத்தின் பத்திரிகை - ஊடகவியாலாளர் சந்திப்பு நேற்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

    படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம் பேசும்போது, "இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பன் திரைப்படக் கல்லூரியின் சீனியர் மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயின்கள் உள்பட பலருக்கும் இது முதல் படம். ஆனால் அனுபவசாலிபோல அசத்தியுள்ளார்கள்.

    Vijayakanth's exit from cinema is big loss, says debutant director

    திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர். அப்போது நான் தயாராக இல்லை. நான் இயக்கத் தயாராக இருந்தபோது அவர் அரசியல், பொது வாழ்க்கை என்று வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்," என்றார்.

    தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி பேசும்போது, "இது நண்பர்களின் கூட்டு முயற்சி. உழைப்புக்கு கிடைத்த படம்...," என்றார்.

    English summary
    Marumugam director Kamal Subramanyam says that Vijayakanth's exit from cinema is a big loss to film institute students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X