twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேபிள் டிவியில் புதுப்படம்... விஷால் புகாரால் 2 காரைக்குடி வாலிபர்கள் கைது

    |

    காரைக்குடி: காரைக்குடியில் உள்ளூர் சேனலில் காப்புரிமை பெறாமல் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதாக நடிகர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியின் இயக்கத்தில் நடிகர் விஷால் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை விஷாலே தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில், படப்பிடிப்பை முடித்து விட்டு இரவு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார் விஷால். அப்போது உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் வடகறி, உன்சமையல் அறையில் போன்ற புதிய திரைப்படங்கள் எந்தவித காப்புரிமை பெறாமல் இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து சட்டவிரோதமாக ஒளி பரப்பப்பட்டுள்ளன.

    புகார்...

    புகார்...

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஷால், இது தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

    கைது...

    கைது...

    உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், சட்ட விரோதமாக புதுப்படங்களை ஒளிபரப்பியதாக பள்ளத்தூர் முகமது மஞ்சுர் (22), தெற்கு தெரு சம்பத் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    பறிமுதல்...

    பறிமுதல்...

    மேலும், அவர்களிடம் இருந்து ஒளிப்பரப்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இழிவான செயல்...

    இழிவான செயல்...

    இது தொடர்பாக விஷால் கூறுகையில், ‘ஏராளமான பணத்தை முதலீடு செய்து, இரவு -பகல் பாராமல் கடும் உழைப்பை கொடுத்து, வியர்வை சிந்தி திரைஉலகத்தினர் எடுக்கும் திரைப்படத்தை திருட்டு வி.சி.டி மூலம் ஒளிப்பரப்பி பிறர் சம்பாதிக்க முயல்வது மிகவும் இழிவான செயலாகும்.

    அடுத்தவர் சொத்து...

    அடுத்தவர் சொத்து...

    அடுத்தவரின் சொத்தை அபகரிப்பதை, உழைப்பினை சுரண்டுவதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை.

    உழைப்பைத் திருடுவது...

    உழைப்பைத் திருடுவது...

    ஒரு திரைப்படத்தை நம்பி தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், வினி யோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்கில் டிக்கெட் கொடுப்பவர் என பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. அவர்களின் நியாயமான உழைப்பை திருடுவது வேதனை அளிக்கிறது.

    தொடர்ந்து போராடுவேன்...

    தொடர்ந்து போராடுவேன்...

    இத்தகையவர்களுக்கு பின் பலமாகவும் சிலர் இருக்கின்றனர். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.

    எதையும் எதிர்கொள்வேன்...

    எதையும் எதிர்கொள்வேன்...

    இதில் மற்ற நடிகர், நடிகைகளையும், ரசிகர் மன்றத் தினரையும் ஈடுபடுத்துவேன். இதனால் எத்தகைய ஆபத்து வந்தாலும் எதிர்கொள்வேன்.

    English summary
    The tall and handsome actor looks to bash illegal stuff offline as well, as he does in his movie. The actor filed a complaint against a local channel for telecasting movies that are still having a run in Box office. Apparently the local channel at Karaikudi had been telecasting the movies ‘Vadacurry’ and ‘Un Samayal Arayil’ and the actor who happened to know this was quite furious.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X