twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறுமுதலீட்டுப் படங்கள் முடக்கம்... விவசாயம் போல் சினிமாவும் அழிந்து விடும் அபாயம்: விவேக் ஆதங்கம்

    |

    சென்னை: திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கும் சிறு முதலீட்டுப் படங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் விவசாயம் போல சினிமாவும் அழிந்து விடும் அபாயமுள்ளதாக நடிகர் விவேக் எச்சரித்துள்ளார்.

    ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படம் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், அமலாபால், அனிருத், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அந்த விழாவில் விவேக் பேசியதாவது:-

    சிரமமான காரியம்...

    சிரமமான காரியம்...

    படங்களை தயாரித்து அதை திரைக்கு கொண்டு வருவது இப்போது மிக சிரமமாக இருக்கிறது. ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து படத்தை தூக்கி விடுகிறார்கள்.

    சிறு முதலீட்டு படங்கள்...

    சிறு முதலீட்டு படங்கள்...

    சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். ஏராளமான சிறு முதலீட்டு படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன.

    விவசாயம் போல்...

    விவசாயம் போல்...

    அந்த படங்கள் வெளிவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயம் அழிவது போல் சினிமாவும் அழிந்து விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காமெடி...

    காமெடி...

    விரைவில் ரிலீசாகியுள்ள இப்படத்தில் தனுஷ் - விவேக் கூட்டணியில் காமெடி தூள் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The comedy actor Vivek expressed hi concern over small budget films, says that if these films are suppressed then the cine ma industrry will have no life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X