twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டின் ‘உட்டி ஆலன்’ விவேக்: மணிரத்னம் பாராட்டு

    |

    சென்னை: விவேக் நம்முடைய உட்டி ஆலன். ஆனால் அவர் போல திகழ விவேக் இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

    தனது சமூக விழிப்புணர்வு காமெடிகளால் சின்னக் கலைவாணர் எனப் புகழப்படும் விவேக் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'நான் தான் பாலா'.

    இப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

    விழாவில் மணிரத்னம் பேசியதாவது:-

    நெருக்கமாக வாய்ப்பு....

    நெருக்கமாக வாய்ப்பு....

    இங்கே விவேக் ஒரு இருக்கையை காட்டி அதில் அமரும் படி கூறினார். அந்த இருக்கையில் ‘கே.பி ' என்று எழுதியிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த எனக்கு அவரது இருக்கையில் அமரக் கிடைத்த இந்த வாய்ப்பை, அவருடன் நெருக்கமாக இருக்க முடிந்ததாக எடுத்துக்கொள்கிறேன்.

    சந்தோஷம்....

    சந்தோஷம்....

    அதேபோல முன்பு ஒருமுறை பாரதிராஜா அலுவலகத்தில் போனில் பேசிக்கொண்டே அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அதைக் கவனித்தவர், ‘யாரும் உட்கார யோசிக்கும் இருக்கையில் அமர்ந்துட்டியே' என்று சிரித்தார். அவர்கள் இருவரின் இருக்கைகளில் அமரும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.

    பொறாமையாக உள்ளது...

    பொறாமையாக உள்ளது...

    காமெடியன்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. காமெடியில் நிறைய உழைப்பும், தரமும் சேர்த்து அற்புதமாக கொடுத்து எல்லா தரப்பு மக்களையும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.

    இது முதல்படி...

    இது முதல்படி...

    அதில் விவேக்கின் பங்கும் நிறைய இருக்கிறது. அறிவுப்பூர்வமான காமெடியை கொடுத்து விவேக் அசத்துகிறார். இந்தப்படத்தை அவர் முதல் படியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    உட்டி ஆலன்...

    உட்டி ஆலன்...

    மேலும், விவேக் நம்முடைய உட்டி ஆலனாக இருக்கலாம். ஆனால் விவேக் இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.' என இவ்வாறு அவர் பேசினார்.

    அது யாரு உட்டி ஆலன்....

    அது யாரு உட்டி ஆலன்....

    உட்டி ஆலனை அமெரிக்க சினிமாவின் அறிவு ஜீவி என்பார்கள். இவருடைய படங்களில் பெரும்பாலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். குறிப்பாக அரசியல் கிண்டல்கள். மதம் சம்பந்தபட்ட கேலிகள், அமெரிக்கர்களின் போலியான பகட்டு வாழ்க்கை. ஒரு வித கோமாளித்தனமும், எக்ஸண்ட்ரிகிஸமும் கலந்த பாத்திரங்களை இவர் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது..

    அப்பவே செஞ்சுட்டாரே... என்.எஸ்.கே.

    அப்பவே செஞ்சுட்டாரே... என்.எஸ்.கே.

    ஆனால் உட்டி ஆலன் செய்ததை நம்ம ஊர் என்.எஸ்.கேவும் அன்றே செய்தவர்தான். அதனால்தான் விவேக்கை சின்னக் கலைவாணர் என்று அவரது வட்டாரத்தில் அழைக்க ஆரம்பித்தனர். இப்போது விவேக்கை உட்டியாக்கி விட்டார் மணி...

    English summary
    Ace filmmaker Mani Ratnam believes that if Vivekh puts in more effort into his comic talent, he can become Tamil cinema's own Woody Allen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X