twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொம்மைப் படம், தயாரிப்பாளரின் கடன்கள், வங்கி நெருக்கடி மே 23-ல் வெளிவருமா கோச்சடையான்?

    By Shankar
    |

    சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் வரும் 23-ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக, இறுதியாக அறிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன.

    இந்தப் பத்து நாட்களுக்குள் கோச்சடையானைச் சுற்றியுள்ள பெரும் சிக்கல் தீருமா? எந்த தடங்களுமின்றி படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் இன்றும் தொடர்கின்றன.

    இந்தக் கேள்விகளுக்கான உண்மையான காரணங்களைப் பார்ப்போம்...

    மீடியாவின் வேலை

    மீடியாவின் வேலை

    கோச்சடையானை எந்த அளவு தூக்கிப் பிடித்தார்களோ, அதைவிட பல மடங்கு வேகத்தில் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தியதில் 99 சதவீதப் பங்கு மீடியாவுக்கே உண்டு.

    "இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான 3டி படம்.. முழுக்க முழுக்க ரஜினி படம்,!'' என படத்தின் இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் ரஜினி மீண்டும் மீண்டும் சொன்ன பிறகும் கூட, இது பொம்மைப் படம் என்ற பதத்தை விடாமல் பயன்படுத்தியது மீடியா.

    ரஜினியே சொன்ன பிறகும்...

    ரஜினியே சொன்ன பிறகும்...

    எல்லாவற்றுக்கும் மேல், ஜெயா டிவி நேர்காணலில், 'இந்தப் படத்தில் எல்லா சீன்லயும் நீங்களே நடிச்சீங்களா சார்?' என விவேக் கேட்க, அதற்கு ரஜினி, 'ஆமா.. நான்தான் நடிச்சேன். ஆனா அது வழக்கமான ஷூட்டிங் இல்ல. லண்டன்ல மொத்தமே பத்து நாட்கள்ல முடிஞ்சிருச்சி. அப்புறம் திருவனந்தபுரத்துல ஒரு வாரம் ஷூட்டிங்," என்று தெளிவாகக் கூறினார்.

    ஆனால் அதை யாரும் காதில் வாங்கவில்லை. ரஜினிக்கு பதில் டூப் போட்டுவிட்டார்கள் என்ற வதந்தியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அதை பெரிய செய்தியாகப் போட்டு கோச்சடையான் இமேஜைச் சிதைக்கும் வேலையில் இறங்கினார்கள்.

    விநியோகஸ்தர்கள் தயக்கம்

    விநியோகஸ்தர்கள் தயக்கம்

    அதுவரை கோச்சடையானுக்கான எதிர்ப்பார்ப்பு, மற்ற ரஜினி படங்களுக்கு நிகராகவே இருந்தது. அதுவும் உலக அளவில் 6000 அரங்குகளில் படம் வெளியாகிறது என்ற செய்தி வந்தபோது, கோச்சடையான் ரேஞ்சே வேறு லெவலில் இருந்தது.

    ஆனால் பொம்மைப் படம் என்ற கிண்டலும், ரஜினி நடிக்கவில்லை என்ற வதந்தியும் கோச்சடையானை ரொம்பவே பாதித்தது. இதன் விளைவு, விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு தயக்கம் நிலவ ஆரம்பித்துவிட்டது.

    இவ்வளவு செலவா?

    இவ்வளவு செலவா?

    கோச்சடையான் தயாரிப்பு செலவு 125 கோடி ரூபாய். இந்தப் படத்துக்கு இவ்வளவா என்று கேட்டனர் சிலர். அவர்களுக்கு அனிமேஷன் பணிகளுக்காக ஆகும் செலவு தெரிய வாய்ப்பில்லை. அவதார் படத்தின் தயாரிப்பு செலவு 237 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பு தெரிய அப்படியே அறுபதால் பெருக்கிக் கொள்ளுங்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது வெறும் 30 நாட்கள்தான். அனிமேஷன் வேலைகள் நடந்தது 5 ஆண்டுகளுக்கும் மேல்... ஒவ்வொரு புது தொழில்நுட்பமும் வர வர அதைப் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் கேமரூன்.

    சவுந்தர்யாவுக்கு அந்த சவால் இல்லை. இருக்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கினார். அதனால்தான் இந்த செலவில் ஒரு முழுப்படம் சாத்தியமானது என்பதையும் சவுந்தர்யா விளக்கியிருந்தார்.

    தயாரிப்பாளரின் கடன்கள்

    தயாரிப்பாளரின் கடன்கள்

    இந்தப் படத்துக்காக தயாரிப்பாளர் பலரிடம் பல கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன்கள் வட்டியுடன் சேர்த்து பெரும் தொகையாகிவிட்டது. படத்தை விற்று இந்தக் கடனைக் கட்டிவிட முரளி மனோகர் நினைத்தார்.

    எனவே வழக்கமான ரஜினி படத்தை விட, கோச்சடையானை அதிக விலைக்கு விற்க முயன்றார் தயாரிப்பாளர். சிலர் ஒப்புக் கொண்டனர், சிலர் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் அவர்களே ஒரு சிண்டிகேட் மாதிரி அமைத்துக் கொண்டு (அபிராமி ராமநாதன் தலைமையில்), விலையைக் குறைத்துக் கொடுங்கள் என தயாரிப்பாளருக்கு நெருக்கடி தந்தனர். அல்லது படத்தை ஷேர் அடிப்படையில் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

    வங்கி நெருக்கடி

    வங்கி நெருக்கடி

    இங்குதான் தயாரிப்பாளர் நெருக்கடிக்கு உள்ளானார். ஏற்கெனவே அவருக்கு பழைய கடன்கள் வேறு. கடன்காரர்களுக்கு அவர் கொடுத்த காசோலைகளில் சில திரும்பிவிட்டன. இதையெல்லாம் கூட சமாளிக்கப் பார்த்தார்கள்.

    ஆனால் இந்தப் படத்துக்காக ரூ 11 கோடி வரை கடன் தந்த ஓரியண்டல் வங்கி, தன் கடனை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று கடிதம் தந்துவிட, கோச்சடையான் மே 9-ம் தேதி அறிவித்தபடி வெளிவரவில்லை.

    எதிர்ப்பார்த்தது ரூ 100 கோடி...

    எதிர்ப்பார்த்தது ரூ 100 கோடி...

    தமிழகத்தில் மட்டும் கோச்சடையான் ரூ 100 கோடிக்கு வியாபாரம் ஆகிவிடும் என்று எதிர்ப்பார்த்தனர். நிலைமையும் அதற்கு சாதகமாகத்தான் இருந்தது, மார்ச் மாதம் வரை. ஆனால் எதிர்மறைச் செய்திகள், அதை வைத்து விநியோகஸ்தர்கள் காட்டிய தயக்கம் படத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின.

     அதிர வைத்த முன்பதிவு

    அதிர வைத்த முன்பதிவு

    "இது பொம்மைப் படம்' என பேசிய பாக்ஸ் ஆபீஸ் வாய்கள், ஆச்சர்யத்தில் அடைத்துப் போனது, மே 6-ம் தேதி. அன்றுதான் படத்துக்கு முன்பதிவு ஆரம்பித்தது. ஆரம்பித்த 6 மணி நேரத்தில், அடுத்த நான்கு நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அபிராமியில் நான்கு அரங்குகளிலும் ஒரு வாரத்துக்கு ஃபுல். அடுத்த இரு தினங்கள் முன்பதிவு நடந்திருந்தால், அட்லீஸ்ட் 15 நாட்களுக்கு டிக்கெட் கிடைத்திருக்காது.

    அதேபோல, திரையரங்குகளில் முன்பதிவுக்காக காத்திருந்த பெரும் ரசிகர் கூட்டம் தியேட்டர்களை ஆச்சர்யப்பட வைத்தது. சென்னையில் சத்யம் தியேட்டர் கட்டுப்பாட்டில் உள்ள 18 தியேட்டர்களிலும் 'கோச்சடையான்' புக்கிங் பிரமிக்க வைத்தது.

    தீருமா அனைத்து சிக்கல்களும்...

    தீருமா அனைத்து சிக்கல்களும்...

    இப்போது கோச்சடையான் படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடுவதை உறுதியாக அறிவித்துள்ள ஈராஸ் நிறுவனம். கிட்டத்தட்ட ரூ 20 கோடியை அதற்குள் செட்டில் செய்ய வேண்டும் மீடியா ஒன்னும் ஈராஸும். விநியோகஸ்தர்களிடம் திட்டமிட்ட தொகையைப் பெற வேண்டும். இதற்கு அவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம்.. கோச்சடையானுக்கு முன்பதிவு செய்ய ரசிகர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் முன்பதிவில் தியேட்டர்கள் குவித்த வசூல்தான்.

    விநியோகஸ்தர்கள் தரப்பிலும் முன்பிருந்த தயக்கம் இப்போது விலக ஆரம்பித்துள்ளது. சரி, படத்தை சொன்ன விலைக்கு வாங்கி வெளியிடலாம். எதற்கும் ஒரு உத்தரவாதம் மட்டும் தந்தால் போதும், என இறங்கி வந்திருக்கிறார்கள்.

    English summary
    Will Rajini's Kochadaiiyaan release on May 23rd... Here is the detailed analysis of all the reasons behind the movies delay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X