twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    125 படங்கள் இயக்கி உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன்!

    By Shankar
    |

    சென்னை: 125 படங்களை இயக்கி உலக சாதனைப் படைத்தவர் மறைந்த ராம நாராயணன்.

    தமிழ் திரையுலகிலன் மிகப் பெரிய சாதனையாளர் ராம நாராயணன். சினிமாவைப் புரிந்தவர்.

    1976-ல் ஒரு பாடலாசிரியராக வேண்டும் என்ற நோக்கில் காரைக்குடியிலிருந்து சென்னை வந்தவர் ராம நாராயணன்.

    சுமை

    சுமை

    1976-ல் முதல் முறையாக ஆசை அறுபது நாள் படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதற்கு அடுத்த ஆண்டே மீனாட்சி குங்குமம் என்ற படத்தைத் தயாரித்தார். அன்றைக்கு அவர் பெயர் ராம் - ரஹீம். தொடர்ந்து இதே பெயரில் சில படங்களுக்கு எழுதியவர், 1980-ம் ஆண்டு முதல் முறையாக படம் இயக்கினார். அதுதான் சுமை.

    9 மொழிகளில்

    9 மொழிகளில்

    தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிஷா, மராத்தி, மலாயா என 9 மொழிகளில் படங்கள் இயக்கினார் ராம நாராயணன்.

    நூறாவது படம்

    நூறாவது படம்

    இவரது 50வது படம் வீரன் வேலுத்தம்பி. திமுக தலைவர் மு கருணாநிதி வசனம் எழுதிய படம் அது. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா படம்தான் அவரது நூறாவது படம். கடைசியாக அவர் இயக்கிய படம் ஆர்யா சூர்யா. அந்தப் படத்துக்கு முன் மலாய் மொழியில் ஒரு படம் இயக்கினார்.

    உலக சாதனை

    உலக சாதனை

    ஒரு இயக்குநராக 125 படங்களை இயக்கியது அவரது உலக சாதனையாகும். அதேபோல இவர் அளவுக்கு அதிக மொழிகளில் படங்கள் இயக்கியவர் யாருமில்லை.

    தயாரிப்பு

    தயாரிப்பு

    கரகாட்டக்காரன், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்பட பல படங்களைத் தயாரித்து, விநியோகித்துள்ளார். ஏராளமான ஆங்கிலப் படங்களை தமிழில் விநியோகித்துமிருக்கிறார்.

    தயாரிப்பாளர் சங்கம்

    தயாரிப்பாளர் சங்கம்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர் ராம நாராயணன். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான இவர், காரைக்குடி தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருந்தார்.

    மிருகங்களை நம்பி...

    மிருகங்களை நம்பி...

    நடிகர்களை விட, மிருகங்களை அதிகம் நம்பி படமெடுப்பவர் என்று ராம நாராயணன் பற்றி, அவர் மேடையில் இருக்கும்போதே சிலர் பேசியதுண்டு. அதையெல்லாம் ஒன் சிரிப்புடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார் ராம நாராயணன்.

    ஆனால் ஒரு முறை, நான் மிருகங்களை வச்சி எடுத்த படம் பத்தித்தான் சொல்றாங்க... சுமை படத்தை நான்தான் எடுத்தேன். சிகப்பு மல்லி, மனைவி சொல்லே மந்திரம்னு வேற படங்களும் எடுத்தேன். அவற்றை யாரும் சொல்வதில்லை," என்றார் வருத்தத்துடன்.

    அனைவருக்கும் நண்பர்

    அனைவருக்கும் நண்பர்

    தமிழ் சினிமாவில் ராம நாராயணன் அனைவருக்குமே நண்பர்தான். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாஸன், இளையராஜா என தமிழ் சினிமாவின் ஆளுமைகளுடன் இணக்கமான நட்பு பாராட்டியவர் ராம நாராயணன்.

    English summary
    Tamil film director and producer Ramanarayanan (65), a record holder of directing 125 movies was passed away on Sunday at a private hospital in Singapore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X