விஜய்யை 'விரட்டிய' பூர்ணா!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008, 19:15 [IST]
விஜய்யைப் பார்த்து நன்றி கூறுவதற்காக 'வில்லு' படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அவசர அவசரமாக வந்த 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் நாயகி பூர்ணா, விஜய் அதற்குள் புறப்பட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்தார்.

மலையாளத்தில் ஷாம்னா என்ற பெயரில் நடித்து வந்தவர் பூர்ணா. தமிழுக்கு அவர் கொடைக்கானல் படம் மூலம் வந்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் ஷாம்னா என்ற பெயரிலே நடித்து வந்தார் பூர்ணா.

ஆனால் 'முனியாண்டி' படத்தில் பூர்ணா என்ற பெயருக்கு மாறியதும், அதே பெயரையே 'கொடைக்கானல்' படத்திற்காகவும் சூடிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பூர்ணா சற்றும் எதிர்பாராத ஒரு இடத்திலிருந்து அவருக்கு பாராட்டு மாலை வந்து சேர்ந்தது. சூடியவர் இளைய தளபதி விஜய்.

'முனியாண்டி' படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய், பூர்ணா அடுத்த ஆசின். அப்படியே நடிப்பிலும், நடனத்திலும் ஆசின் போலவே இருக்கிறார் என பாராட்டித் தள்ளி விட்டார்.

இதைக் கேட்டது முதலே பூர்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. விஜய்யே பாராட்டி விட்டார், விஜய்யே பாராட்டி விட்டார் என்று அத்தனை பேரிடமும் சொல்லிப் பூரித்துப் போய் வந்தார்.

இந் நிலையில், விஜய்யை நேரில் பார்த்து நன்றி சொல்ல முடிவு செய்த அவர் விஜய்யை எங்கு பார்க்கலாம் என விசாரித்துள்ளார். அப்போதுதான் ஏவி.எம். ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் 'வில்லு' படத்தின் ஷூட்டிங் நடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வேகமாக அங்கு ஓடினார். அவரது துரதிர்ஷ்டம், அதற்குள் விஜய் கிளம்பிப் போய் விட்டார். இதனால் பூர்ணா பெரும் ஏமாற்றமடைந்தார். இருந்தாலும் விஜய்யை விட மாட்டேன். எப்படியாவது பார்த்து நன்றி சொல்லி விட்டுத்தான் ஓய்வேன் என்றார் புன்னகையுடன்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST