Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தனுஷ் - ஹரியின் அருவா, வேங்கையான கதை!

Posted by:
Published: Tuesday, October 26, 2010, 12:36 [IST]

26 Danush New Movie Vengai

தனுஷும் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று 6 மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இடையில் அவர் ரஜினி படம் இயக்கக் கூடும் என்று கூறப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர்.

ஆனால் இப்போது, ரஜினி படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளதால், நடிகர் தனுஷும், ஹரி படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு வேங்கை எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இதில், தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். விஜயா வாஹினி சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் ஹரி கூறுகையில், "கோபக்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு. காவல்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு இல்லை என்ற ஒரு வரிதான் கதை.

இந்த படத்தில் தனுஷ் ஒரு கிராமத்து கோபக்கார இளைஞராக நடிக்கிறார். தமன்னா, கிராமத்து பெண்ணாக வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தை பின்புலமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பையும் அங்கேயே நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்...,'' என்றார்.

இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் அருவா. இந்தப் பெயர் லேசாக வெளியாகி, ஏக கிண்டலுக்குள்ளானதால் கடுப்பான ஹரி, இப்போது வேங்கை என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter