Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகருக்கு பளார் விட்ட ஜெனிலியா!

Posted by:
Published: Wednesday, November 10, 2010, 17:06 [IST]

10 Genelia Slaps Mischievous Fan

கூட்டத்தில் சிக்கிக் கொண்ட தன்னிடம் சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகர் கன்னத்தில் அறைவிட்டார் நடிகை ஜெனிலியா.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.

ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர்.

ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. 'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI