ராணா.. செட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்... வெளிநாட்டு பயணத்துக்கு ரஜினி ரெடி!

வியாழக்கிழமை, நவம்பர் 3, 2011, 17:11 [IST]
ரஜினி முழுமையாக குணமடைந்து பழையபடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டதால் ராணா படப்பிடிப்புக்கான பணிகள் முழு வேகத்தில் தொடங்கிவிட்டன.

ரஜினியின் கனவுப் படம் எனப்படும் ராணா தொடங்கிய நாளிலேயே ரஜினி நோய்வாய்ப்பட்டார். இதனால் அந்தப் படத்தின் நிலை கேள்விக்குரியதானது.

அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று உடல்நிலை தேறி வந்த பின்னும் ராணா ஷூட்டிங் உறுதியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் வரும் ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என ரஜினியே சமீபத்தில் திருப்பதியில் அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரத்தில் மட்டும் அவர் நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ராணா படப்பிடிப்பு பணிகள் குறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் கலந்து பேசிய ரஜினி, ஜனவரிக்குள் படத்தில் பணியாற்றும் அத்தனை கலைஞர்களும் தங்கள் கமிட்மெண்டை முடித்துக் கொண்டு ராணா செட்டுக்கு திரும்பிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பெரிய செட்கள் அமைக்கும் வேலை ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் ஆரம்பமாகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுக்க விருப்பதால், ரஜினி அதற்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளாராம். முதல்கட்டமாக பிரிட்டனில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.
English summary
Rajini is gearing up to attend the shooting of Raana in the first week of January. Sources say that the actor has requested all the artists and technicians of Raana would be ready in January to restart the shoot.
User Comments
Bhupathy 04 Nov 2011 11:37 am
வேகம் இருக்கும்வரை ( நடிப்பு இல்லை ) நடித்து கொண்டு என்னை vazha வாய்த்த (வைக்கும்) தமிழக மக்களை சுரண்டி கொண்டே இருப்ப்பேன் ... இது எப்படி இருக்கு ...
jayaghanth 19 Nov 2011 09:13 pm
பிளஸ் சட் யுவர் மௌத் சூப்பர் ஸ்டார் இஸ் கிரேட்
ram 22 Nov 2011 09:45 pm
super
naan kadavul 03 Nov 2011 05:51 pm
தலைவர் படம் நடிக்க-ஆரம்பிச்சுட்டார் உங்க எத்தின பேரோட சட்ட கிழிய போகுதுதோ
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST