ரூ 60 லட்சம் செட் பழசாகக் காத்திருக்கும் 'கும்கி' டீம்!

திங்கள்கிழமை, நவம்பர் 21, 2011, 16:42 [IST]
கும்கி படம் குறித்து வரும் செய்திகள், அந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்புகளை வெகுவாக அதிகரித்துள்ளது.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. யானைகளின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் பிரமாண்ட காதல் படம் இது. பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவின் அடர்ந்த காடுகளில்தான்.

கும்கி கிளைமாக்ஸுக்காக சமீபத்தில் ரூ 60 லட்சத்தில் ஒரு செட் போட்டிருக்கிறார்கள் கேரளாவின் மூணாறு பகுதியில்.

ஆனால் போட்டவுடன் படப்பிடிப்பு நடத்தவில்லை. காரணம், செட் புதிதாக இருந்ததுதானாம். எனவே அது பழசாக இப்போது காத்திருக்கிறார்கள் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர்.

இதுகுறித்து இயக்குநர் பிரபு சாலமனிடம் கேட்டபோது, "செட் புதிதாக இருந்தால் அன்னியமாக இருக்கும். சரி பழசாகவே போட்டுவிடலாம் என்றால், அதில் பர்பெக்ஷன் கிடைக்காது, முழுமையாகவும் இருக்காது. எனவே அந்த செட் இயற்கையாகவே பழசாக வேண்டும். அதனால் காத்திருக்கிறோம்," என்றார்.
English summary
The Kumki movie team is waiting for next few days to getting old of their Rs 60 lakh worth set. The set was erected in Munnar to shoot the climax of this Prabhu Solomon directed film.
User Comments
Harryy Arun 22 Nov 2011 04:00 pm
அப்படியே இந்த 15 வயசு ஹீரோயின் 60 வயசாகும் வரை காத்திரு சாலமன். படம் இன்னும் தத்ரூபமா வரும்ல...
NASAMAPONA INDIAN 21 Nov 2011 05:13 pm
இந்த நாடு, நாசமாவதற்கு சினிமாதான் காரணம் இங்க பஸ் டிக்கெட் ,பால் ,வீளை அதிகமா போய்ட்டு இற்கு இவனுக்கு செட் பலசகுனுமம்மா அனா கொடுமட இது PLZ INCRESE TAX IN THIS KIND OF FILMS PLZ LEAVE IT POBLIC
Enna Ithu 23 Nov 2011 07:46 am
உண்மையை போட்டு உடச்சுட்டீலே. நம்மாளுக்கு துங்க சோறு இருக்கோ இல்லையோ கொலண்டைக்கு பால் இருக்கோ இல்லயோ ஒரு டப்பா படம் பார்த்தாதானய்யா மனுஷனுக்கு தூக்கம் வருது.. இதிலே பேனர் செலவு கட்டவுட்டு செலவு.. சங்கு கிளியிர மாதிரி விசில் வேற அடிக்கணும். இதுக்கு தனைய தமிழனா போரப்பெடுத்தது. இதிலே வேற சீமான் சேரன்னு கருத்து சொல்லேர வருவானுவ.
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST