Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாகன் ஷூட்டிங்கில் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஸ்ரீகாந்த்!

Posted by:
Published: Wednesday, May 9, 2012, 15:56 [IST]

Bomb Blast Srikanth Escapes Unhurt

பாகன் பட ஷூட்டிங்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பாகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் தானே நடித்தார். காட்சிப்படி குண்டுவெடிக்கும்போது படக்குழுவினர் கயிற்றின் மூலம் ஸ்ரீகாந்தை அங்கிருந்து தூக்க வேண்டும். ஆனால் குண்டுவெடிக்கும் முன்பே கயிறு அறுந்துவிட்டது. இதை படக்குழுவினர் யாரும் கவனிக்கவில்லை.

ஆனால் ஸ்ரீகாந்த் எப்படியோ குண்டுவெடிக்கும் முன்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு விபத்தை சந்திக்கிறேன். எனக்கும், தீக்கும் அவ்வளவு ராசி. என்னை விபத்து பையன் என்றே அழைக்கலாம்.

குண்டுவெடிக்கும்போது என்னை அங்கிருந்து தூக்க கட்டப்பட்டிருந்த கயிறு குணடு வெடிக்கும் முன்பே அறுந்துவிட்டது. அது படக்குழுவினருக்கு தெரியாது. நான் எப்படியோ அங்கிருந்து வெளியேறவும், குண்டு வெடிக்கவும் கரெக்டாக இருந்தது. குண்டு வெடித்தபோது படக்குழுவினர் என்னை தூக்க கயிற்றைப் பிடித்து இழுக்க முயன்றபோது தான் அவர்களுக்கு கயிறு அறுந்ததே தெரிந்தது.

டூப் ஆர்டிஸ்டகளுக்கும் குடும்பம் உள்ளது. இது போன்ற காட்சிகளால் அவர்களுக்கும் ஆபத்து என்று தெரிந்து தான் நானே நடிக்க தீர்மானித்தேன் என்றார்.

English summary
Actor Srikanth has luckily escaped unhurt while acting in a bom blast scene for the movie Pagan.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter