Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

படப்பிடிப்பில் மயங்கிய நடிகை மோனல்!

Posted by:
Updated: Wednesday, September 19, 2012, 11:46 [IST]

Monal Kajar Faints At Shooting Spot

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை மோனல் கஜார் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து பரபரப்பேற்படுத்தினார்.

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல்லவராயன்' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி 'கழுகு' கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நெருக்கமாக நடித்துக் கொண்டிருந்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள்.

உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Story first published:  Wednesday, September 19, 2012, 11:46 [IST]
English summary
Actress Monal Kajar has fainterd in the shooting spot of Vanavarayan Vallavarayan.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter