Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'பனி விழும் மலர்வனம்'.... மயக்கும் மென்பனிச் சாரல்

Posted by:
Updated: Thursday, March 14, 2013, 13:40 [IST]

இளையராஜாவின் இசையில் உருவான இனிமையான பாடல் ‘பனிவிழும் மலர்வனம்...' இந்த பாடல் வரிகளையே படத்திற்கு தலைப்பாக்கி அதற்கேற்ப குளு குளு இடங்களில் படமாக்கியிருக்கின்றனர் படக்குழுவினர்.

மலர்கள் நிறைந்த வனத்தில் பனி விழுவதை பார்ப்பது அழகுதான். அத்தகைய இயற்கை சூழல் தேக்கடி, குமுளு பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மென் பனிச் சாரலாய்.... ‘பனி விழும் மலர்வனம்' என்ற தலைப்பைப் போலவே காட்சிகளும் கவித்துவமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் படக்குழுவினர்.

அழகே ஆபத்து….

இயற்கையே அழகு! அதுவே ஆபத்து! நிறைந்தது என்ற புதுமையான கருவை அடிப்படையாகக் கொண்டு 'பனி விழும் மலர்வனம்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை எழிலைக் கண்ணுக்கு விருந்தாக்கி ஒரு சிறந்த படைப்பைக் கொண்டுவர மலைகளின் மேடு பள்ளங்களில் அட்டைகளும் மற்ற இயற்கை உயிரினங்களும் தந்த வலியைப் பொருட்படுத்தாமல், கடினமாக உழைத்திருக்கிறார்களாம் படக் குழுவினர்.

இனிமையான காட்சிகள்

கண்கவரும் இடங்களில், தேர்ந்த நடிகர்கள் மற்றும் திறமையான தொழிநுட்பக் கலைஞர்களைக் கொண்டு தயாராகிவரும் பனிவிழும் மலர்வனம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, இத் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள்,இந்தியாவின் ‘இன்கிரிடிபில் இந்தியா' விற்கு ஆவணப்படுத்தக் கூடிய திரைப்படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இந்தப் படத்தின் இயக்குநர்.

ஒரு நாயகன் இரு நாயகி

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த‌ அபிலாஷ் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்த சாய்னா நாயகியாக நடித்திருக்கிறார். பேராண்மையில் ஐந்து பெண்களில் ஒருவராக அறிமுகமாகி அண்மையில் வெளியான நீர்ப்பறவையில் கவனிக்க வைத்த வர்ஷா மற்றொரு நாயகி. இவர் தற்போது தயராகிவரும் அமைதிப்படை 2 படத்திலும் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை நடிகர் பாபா லக்ஷ்மண், இயக்குநர் ஜெகனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனராம்.

முதல்படமே குளுமை

சிடிஎன் ப்ரொடக்ஷன்ஸ் என்று அழைக்கப்படும் கம்பைன்ட் டேலன்டட் நெட்வொர்க் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகிவருகிறது. ஜீவா நடித்த ராமேஸ்வரம், ஜித்தன் ரமேஷ் நடித்த நீ வேணுண்டா செல்லம் ஆகிய படங்களில் பணியாற்றிய ஜேம்ஸ் டேவிட் இந்தப் படத்தை இயக்குகிறார். சுள்ளான், மனதோடு மழைக்காலம், ஜனனம் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராகன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். ரஜின் இசையமைக்க ரவிஷங்கர் படத்தொகுப்பை கவனிக்கிறார்

பேச வைக்கும் கலை இயக்குநர்

நண்பன், ஐ, இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய டி. முத்துராஜ் இந்தப் படத்தின் கலை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே விருதுகளைக் குவித்த படங்களான அங்காடி தெரு, பழசி ராஜா மற்றும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களின் கலை இயக்குநரும் இவர்தான். இந்தப்படம் கலை அழகுக்காக பேசப்படும் என்று கூறியுள்ளனர்.

Story first published:  Monday, January 21, 2013, 9:49 [IST]
English summary
Panivizhum Malarvanam as breezy as the title sounds it is an adventurous fantasy love film that is built on a first of it's kind plot 'Nature is heroic', It is shot in some of the exotic locations of Kumuli & Thekady.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Rajasthan Royals decided to bat
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.