twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமுத்திரக்கனி சொன்னதும் சாக்கடையில் விழுந்த ஜெயம் ரவி!

    By Shankar
    |

    இயக்குநர் சமுத்திரக்கனி சொன்ன அடுத்த நொடியே சாக்கடையில் விழுந்து அனைவரையும் வியக்க வைத்தாராம் நடிகர் ஜெயம் ரவி.

    இது நடந்தது சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி - அமலா பால் நடிக்கும் நிமிர்ந்து நில் படத்துக்காக.

    இரட்டை வேடங்கள்

    இரட்டை வேடங்கள்

    ‘நிமிர்ந்து நில்' படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயமரவியின் கேரக்டர்கள் ரொம்பவே வித்தியாசமானவை என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. 'ஒன்று நல்லவன். அடுத்தது இன்னும் நல்லவன்'.

    அத்தனை அழகு

    அத்தனை அழகு

    வழக்கமான சமூகக் கோபம்தான் படம் என்றாலும், இதில் சமுத்திரக்கனி ஜெயம்ரவியை வித்தியாசப்படுத்தியிருக்கிற அழகு தான் முழுப்படத்திலும் ரசிகர்களை அள்ளிக் கொள்ளும் என்கிறார்கள் நிமிர்ந்து நில் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

    விறுவிறு திரைக்கதை

    விறுவிறு திரைக்கதை

    சாந்த சொரூபி. ஒழுக்கமானவன். குருகுலத்தில் படித்தவன். இப்படிப்பட்ட இளைஞன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை ஒரு கட்டத்தில் தட்டிக் கேட்கத் தொடங்குகிறான். அதன்பிறகே அதுவரை வளைந்து கிடந்த பல முதுகுகள் நிமிர்ந்து நிற்கின்றன என்பதை விறுப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

    பாராட்டு

    பாராட்டு

    சமுத்திரக்கனி வியந்து பாராட்டுவது ஜெயம் ரவியை. ஒரு காட்சியில் ‘சாக்கடையில் விழு' என்று சொல்லி முடிப்பதற்குள் விழுந்து அதிர வைத்திருக்கிறார் ஜெயம்ரவி.

    அமலா பால் அதிர்ச்சி

    அமலா பால் அதிர்ச்சி

    நாயகி அமலாபால்கூட சற்றே எட்டத்தில் நின்று மூக்கை பிடித்தபடி ‘‘இப்படி பாதுகாப்பில்லாமல் விழலாமா ரவி?'' என்று அக்கறையாய் கேட்க, அதற்கு ஜெயம் ரவியின் பதில் என்ன தெரியுமா? ‘‘இயக்குநர் சொன்னப்புறம் யோசிச்சிக்கிட்டிருந்தா தப்பாயிடும்!''

    எல்லோருக்கும் பிடிச்ச நடிகர்

    எல்லோருக்கும் பிடிச்ச நடிகர்

    "ஜெயம் ரவியின் இந்த டெடிகேஷன்தான் அவருக்கென்று ஒரு நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்திருக்கு. அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொடுவார்," என்கிறார் சமுத்திரக்கனி.

    English summary
    Director Samuthirakkani praised Jayam Ravi for his dedication and obedience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X