தசாவதாரம் மீண்டும் தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, மே 30, 2008, 18:18 [IST]
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன மீண்டும் தள்ளி வைத்து விட்டார். ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதி படம் வெளியாகவுள்ளதாம்.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள, கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள தசாவதாரம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சோதனைகள்.

இத்தனை சிக்கல்களையும் தாண்டி படத்தை ரிலீஸ் செய்ய ஜூன் 6ம் தேதிக்கு நாள் குறித்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால், அப்பாடா, படத்திற்கு தடங்கல் நீங்கியதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் இப்போது தடாலடியாக ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு ரிலீஸைத் தள்ளி வைத்து விட்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்திப் பதிப்பில் இன்னும் 2 ரீல்களுக்கு டப்பிங் பணிகள் பாக்கி உள்ளனவாம். அதேபோல ஆப்டிகல் வேலை மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை. அவை பிரசாத் லேபில் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் ஜூன் 12ம் தேதி படம் ரிலீஸாகும். ஆனால் இந்தி டப்பிங் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பிட்ட நாளுக்குள் அது முடியுமா என்பதும் தெரியவில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போட வேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும். மேலும் மும்பையில் உள்ள ஆட்லேப்ஸ் கிளையில் சில பணிகள் நடந்து வருகின்றன. அதனால்தான் இந்த தாமதம். ஜூன் மத்திக்குள் படம் எப்படியும் வெளியாகி விடும் என்றார்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST