யு.எஸ்சில் தசாவதாரம் மெகா ரிலீஸ்

செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008, 15:23 [IST]
அமெரிக்காவிலேயே அதிக பிரிண்டுகளுடன் வெளியாகும் முதல் தென்னிந்தியப் படம் என்ற பெயர் தசாவதாரத்திற்குக் கிடைக்கவுள்ளது. அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் தசாவதாரம் ரிலீஸாகவுள்ளது.

தசாவதாரம் விருந்துக்கு உலகெங்கும் உள்ள கமல் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் தசாவதாரம் திரைக்கு வருகிறது.

இதில் தமிழில் மட்டும் 30 பிரிண்டுகள் தயாராகியுள்ளதாம். பே ஏரியா, நியூ ஜெர்சி ஆகியவற்றில் தலா 3 தியேட்டர்களில் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் தென்னிந்தியப் படம் ஒன்று திரையிடப்படுவது இதுவே முதல் முறையாம்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை படு சூடாக உள்ளதாம். விற்பனை தொடங்கிய 2 நாட்களிலேயே சில ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

சிகாகோவில் யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படங்களுக்கு 200 முதல் 400 ஆன்லைன் டிக்கெட்டுக்களே விற்றதாம். ஆனால் தசாவதாரத்திற்கு சில மணி நேரங்களிலேயே 200 டிக்கெட்டுகள் விற்று விட்டதாம்.

இதற்கிடையே சிகாகோவில் தசாவதாரம் பட ரிலீஸையொட்டி கமல் ரசிகர்கள் சார்பில் வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கமலின் 10 வேடங்களை குறிக்கும் வகையில், 10 விதமான தோசைகள் விற்பனைக்கு விடப்பட்டன. மேலும் 250 பேருக்கும் தசாவதாரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

தக்ஷின் ஷூவம்பர்க் ஹோட்டலில் இந்த வித்தியாச விருந்து நடந்தது. அதன் தலைமை சமையலரான ஜெய், தீவிர கமல்ஹாசன் ரசிகர். அவருக்கு முதல் டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் தசாவதாரம் படத்தின் டிக்கெட்டை முதன் முதலில் பெற்ற ரசிகர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.

தசாவதாரம் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தரான நர்மதா மீடியா நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST