'ஹாலிவுட்' இங்கு வரணும்: கமல்

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST  
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Poorna in Kodaikanal
 
நாம் அமெரிக்கா போய் ஆஸ்கர் வாங்குவதைவிட, வெள்ளைக்காரன் இங்கு வந்து நாம் தரும் விருதை வாங்கிச் செல்ல வேண்டும். அந்தக் காட்சியை என் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்றார் கமல்ஹாசன்.

`கொடைக்கானல்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்,

அழகான கமலஹாசனை கோவணம் கட்டிப் பார்த்தவன் நான். அவருடன் நான் நிறைய பழகியிருந்தாலும், அவரை இப்போதும் வியப்பாகத்தான் பார்க்கிறேன், இந்த அமானுஷ்ய சக்தி அவருக்குள் எப்படி வந்தது என்று.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரே நடிகர் உலகநாயகன் கமலஹாசன்தான் என்றார்.

பி்ன்னர் கமல் பேசுகையி்ல்,

என்னைப் பார்த்து வியப்பதாக பாரதிராஜா கூறினார். அவரைப் பார்த்து நான் வியப்பது, என்னைப் பார்த்து அவர் வியப்பதெல்லாம் பரஸ்பரம்.

16 வயதினிலே படத்தின் கதையை அவர் வந்து என்னிடம் சொன்னபோது, அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டது, என் கெட்டிக்காரத்தனம். அதை நாங்கள் இருவரும் இன்னும் மறக்கவில்லை.

சின்ன படம், பெரிய படம் என்று வேறுபடுத்துவது சரியல்ல. நிறைய முதலீட்டில் உருவான எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழித்தால், அது சின்ன படமாகிவிடும். அதுபோல் குறைவான முதலீட்டில் உருவான படம் வெற்றி பெற்றால், அது பெரிய படமாகி விடும். 16 வயதினிலே அப்படிப்பட்ட படம்தான்.

தண்ணீர் இல்லாத இடத்தில் போய் அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். அகதிகளுக்கு சோற்றுப் பொட்டலத்தை வீசுவது போல், பிலிம் ரோல்களை வீசிவிட்டுச் செல்வார்கள். டிஸ்கோ நடனம் ஆடுபவனுக்கு கோவணத்தை கட்டி படம் எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசி ஏளனம் செய்தார்கள்.

படம் வெளிவந்தபின், அப்படி பேசியவர்கள் எல்லாம் பாராட்டினார்கள்.

தசாவதாரம் படத்தின் வெற்றியைப் பார்த்து, இன்றைக்கு உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் இதுபோல் கடினமாக உழைக்கும்போது, அதற்காக கிடைக்கிற பாராட்டுகள் நெகிழ வைக்கிறது. சந்தோஷம்.

இங்கே பேசியவர்கள், ஆஸ்கர் விருது பற்றி குறிப்பிட்டார்கள். நான் பல முறை சொன்னதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது.

நாம் அங்கு போய் அந்த விருதை வாங்குவதைவிட, இங்கு நம்மவர்கள் வழங்கும் விருதை வெள்ளைக்காரர்கள் வாங்கிப் போகவேண்டும். அதுதான் நமக்குப் பெருமை.

இதை என் வாழ்நாளில் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்பதில் தின்னமாக இருக்கிறேன். அதற்காக, ஆழ உழுத விதைகள் இங்கே உள்ளன என்றார் கமல்.
Topics: kamal, poorna, kodaikanal, bharathiraja, dasavatharam, கமல், பூர்ணா, நடிகை, தமிழ், சினிமா, ஹீரோ
ஜூன் 17, 2008 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 

மர்மயோகி கைவிடப்படவில்லை - கமல் பி.ஆர்.ஓ

கலைஞானி கமல்ஹாசனின் மர்மயோகி தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகியுள்ளது. மற்றபடி இது கைவிடப்படவில்லை என்று கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் பிரமாண்டப் படைப்பாக உருவாகவிருக்கிறது மர்மயோகி. இப்படத்தில் திரிஷா, ஷ்ரியா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையி்ல நிதிப் பிரச்சினை காரணமாக படத்தைத் தயாரிப்பதாக கூறப்பட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனம் விலகி விட்டதாகவும், இதனால் படம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மர்மயோகி கைவிடப்படவில்லை என்று.....

ர்வதேச திரைப்பட விழாவின்-தலைமை கமல்!

கோவா தலைநகர் பனாஜியில் வருகிற 22ம் தேதி தொடங்கும் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI-2008) தலைமை விருந்தினர்களாக கமல்ஹாசனும், முன்னாள் பாலிவுட் தேவதை ரேகாவும் அழைக்கப்பட்டுள்ளனர். பனாஜியி்ல் ஆண்டுதோறும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதற்கு தலைமை விருந்தினர்களாக கமல்ஹாசனும், ரேகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் செயல்படுவார்கள். தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை இலியானா சிறப்பு விருந்தினராக இருப்பார். இவர் கோவாவை.....

கமல் ~~தலைவன்~~?

மர்மயோகியை கமல்ஹாசன் முற்றிலுமாக நிறுத்தி வைத்து விட்டது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்து அதிரடியான காமெடி பிளஸ் அட்வென்சர் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். படத்திற்குப் பெயர் 'தலைவன் இருக்கிறான்'. கமல்ஹாசனின் லட்சியப் படமான மருதநாயகம் முடங்கிக் கிடக்கிறது. கண்டிப்பாக வரும், ஆனால் எப்போது என்று தெரியவில்லை என்று கமலே கூறுகிறார். இந்த நிலையில் மருதநாயகம் வரிசையில் மர்மயோகியும் இணைகிறது. பெரும் பொருட்செலவில் திட்டமிடப்பட்ட மர்மயோகியை தயாரிக்கும் அளவுக்கு ஸ்திரமான பண நிலையில் பிரமீட் சாய்மீரா நிறுவனம் இல்லாததால் படத்தை கிடப்பில் போட கமல்ஹாசன் தீர்மானித்து விட்டார்......

ஈழப்போரும் வியாபார அரசியலும்: கமல் ~~சுரீர்~~ அறிக்கை

எனது பிறந்த நாளை இலங்கையில் தமிழ் மொழி பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய இயக்கச் சகோரதர்களுக்கு வணக்கம். நவம்பர் 7ம் தேதியை என் பிறந்த நாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும், பிறந்த நாட்டையே பலரும்.....
Oneindia  Oneindia Login