சென்னை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரைப்படத் துறையினர் நடத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நடிகர் நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த அறப்போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய் மற்றும் முன்னணி நடிகர்கள் பங்கேற்பதாக உறுதியாளித்துள்ளனர் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் இன்று தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் ராமேஸ்வரத்தில் ஊர்வலம் பொதுக் கூட்டம் நடத்தினார்கள். பாதுகாப்பு கருதி நடிகர் நடிகைகள் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர்.
அதன்படி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 1-ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத்த்தில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். அவருடன் கமல்ஹாசன், அஜீத், விக்ரம், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது.
உண்ணாவிரதத்தையொட்டி 1-ந் தேதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்க மாடடார்கள் என நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் 1-ந்தேதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.