மீண்டு(ம்) வந்த குஞ்சுமோன்

திங்கள்கிழமை, நவம்பர் 3, 2008, 19:57 [IST]
சூரியன், ஜென்டில்மேன், காதலன் என வெற்றிப் படங்களாகக் கொடுத்து ஒரு காலத்தில் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் கே.டி.குஞ்சுமோன்.

ஒருவிதத்தில் இன்றைய மெகா தயாரிப்புகளுக்கு முன்னோடியாக இருந்த இந்த பெரிய மீசைக்காரர், காதல் தேசம் படத்தின் தோல்வியிலிருந்தே எழ முடியாத அளவுக்கு துவண்டு போனார், தொடர்ந்து ரட்சகன் படமும் அவுட்.

அவர் கடைசியாக தன் மகன் எபியை வைத்துத் தயாரித்த கோடீஸ்வரன் வெளி வர முடியாத அளவு இடியாப்பச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டுவிட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக எட்டு வருடங்கள் படமே எடுக்காமல் கேரளா பக்கம் போய்விட்டார் குஞ்சுமோன்.

இப்போது நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்துள்ள குஞ்சுமோன், மீண்டும் உற்சாகத்துடன் புதுப்படத்துக்கு பூஜை போட்டுவிட்டார்.

படத்தின் பெயர் காதலுக்கு மரணமில்லை.

சென்னை கிரீன்பார்க்கில் நடந்த இந்தப் படத்தின் பூஜைக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்தது. குஞ்சுமோனுடன் கருத்துவேறுபாடு கொண்டிருந்த இயக்குநர் ஷங்கர் கூட விழாவுக்கு வந்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கேரள வரவு மீரா நந்தன், தேஜாஸ், ரவி மற்றும் மும்பை மாடல் மத்தலஸா மற்றும் இன்னொரு மாடல் நடிக்கும் இந்தப் படத்தின கதையை குஞ்சுமோனே எழுதியுள்ளார். இசை பரத்வாஜ். இயக்குநர் பொறுப்பை சி பாலாஜி ஏற்றுள்ளார்.

வாங்க...மீண்டும் அசத்துங்க ஜென்டில்மேன்!
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST