மணிரத்தினத்தின் படம் எதிலுமே இதுவரை நடித்திராத, அவரது மனைவி சுஹாசினி முதல் முறையாக அசோக வனம் படத்தில் நடிக்கவுள்ளார்.
மணிரத்தினத்தின் படத்தில் ஏதாவது பிட் ரோலிலாவது தலை காட்டி விட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் இருக்கும். ஆனால் பலருக்கு இது நிறைவேறுவதில்லை. காரணம், கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருப்பவர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வைப்பார் மணிரத்தினம்.
இப்படி அவர் பார்த்துப் பார்த்து கலைஞர்களைத் தேர்வு செய்வதால், அவரது மனைவியான சுஹாசினிக்கே கூட இதுவரை மணிரத்தினத்தின் படத்தில் தலை காட்டக் கூடிய வாய்ப்பு கிட்டவே இல்லை.
சிறந்த நடிகையான சுஹாசினிக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் பற்றிக் கூறவா வேண்டும்.
ஆனால் திடீர் ஆச்சரியமாக மணி படத்தில் சுஹாசினி நடிக்கவுள்ளார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் உள்ளிட்ட பெரும் கலைஞர்கள் நடிக்கும் அசோக வனத்தில் சுஹாசினிக்கும் ஒரு கேரக்டர் கொடுத்துள்ளாராம் மணிரத்தினம்.
இதனால் சுஹாசினியை விட அவருக்கு நெருக்கமானவர்கள்தான் ரொம்ப வியப்படைந்துள்ளனராம். மணி படத்தில் சுஹாசினியா என்பதுதான் அவர்களது ஆச்சரியம்.
ஆனால் சுஹாசினியோ இதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போதுதான் நான் அவரது படத்திற்குப் பொருத்தமானவளாகத் தெரிந்திருக்கிறேன் என்கிறாராம் சிரித்தபடி.
படபடவென பேசக் கூடியவர் சுஹாசினி. மணி படமாச்சே, அசோகவனத்தில் அவர் எப்படிப் பேசப் போகிறாரோ!