{image-25-slumdog-child-artists-200.jpg tamil.oneindia.in}
எட்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ள ஆங்கிலப் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த ரூபினா அலி, அசாருதீன் இஸ்மாயில் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்களுக்கும் மகாராஷ்டிர அரசு வீடுகளை வழங்கவுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி ஆணையத் தலைவர் கெளதம் சாட்டர்ஜி கூறுகையில், இந்த இரு குழந்தைகளும் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளன.
அவர்கள் தற்போது குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அதை வீடு என்று கூட சொல்ல முடியாத மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்தது. எனவே அவர்களுக்கு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Read: In English
படத்தின் நாயகனான தேவ் படேல் மற்றும் நாயகி பிரீதா பின்டோவின் சிறு வயது கேரக்டர்களாக இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி ஆணையத் தலைவர் கெளதம் சாட்டர்ஜி கூறுகையில், இந்த இரு குழந்தைகளும் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளன.