உன்னைப் போல் ஒருவனுக்குப் பின் மிஷ்கினுடன் கூட்டணி அமைக்கிறார் கமல். இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் மிக மிக ரகசியமாக பணிகள் நடக்கின்றன.
நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, மிஷ்கினுக்கு முன்பணம் கொடுத்து பணிகளை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார் கமல் என்கிறார்கள்.
முன்னதாக மர்மயோகி உள்பட பல கதைகளை மிஷ்கினும் கமலும் விவாதித்ததாகவும், இறுதியில் அரசியலை மையமாகக் கொண்ட கதைக்கு கமல் ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கதைக்கு இறுதி வடிவம் தரும் முயற்சியில் தீவிரமாக உள்ளாராம் மிஷ்கின்.
உன்னைப் போல் ஒருவன் செப்டம்பரில் ரிலீசாகிறது. இந்த ரிலீசுக்கு முன்பே புதுப்படம் பற்றிய அறிவிப்பை பிரஸ் மீட் ஒன்றில் கமல் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அநேகமாக உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஆடியோ ரிலீஸிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும்.